…::மரண அறிவித்தல்::…
திருமதி.சோ.கனகாம்பிகை
மாதகலைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகாம்பிகை சோமசுந்தரம் (ஓய்வு பெற்ற பிரதி அதிபர், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) 13.07.2013 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மருமகளும், கப்டன் என்.சோமசுந்தரம் (ஓய்வு பெற்ற பிரதி அதிபர், யாழ்.இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், சுரேஸ் (அமெரிக்கா), நிறைஞ்சனா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், பிரியா(அமெரிக்கா), ரூபராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சானுகா, சகானா, யாழன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற திருச்செல்வ விநாயகமூர்த்தி (முன்னாள் ஆசிரியர், சென்ஜோசப் மகா வித்தியாலயம், மாதகல்) மற்றும் திருமதி சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தனலட்சுமி, இந்திரமலர், சந்திரமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இல.07, மணிக்கூட்டு ஒழுங்கை, யாழ்ப்பாணம். , 021 222 1142