மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தியினால் (25) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன…!

0 comments
2014-நல்லூர் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில்..
 
சென்னை போர்ட் சிற்றி றோட்டறிக் கழகத்தின் அனுசரணையில், மாதகல் நுணசை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 115 மாணவர்களுக்கான காலணிகள், பாடசாலையில் இன்று செவ்வாய்கிழமை (25.11.2014) இடம்பெற்ற வைபவத்தில் வைத்து மாணவர்களிடம் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தி பிரதம விருந்தினராகவும், நல்லூர் றோட்டறிக் கழகத் தலைவர் றோட்டேறியன் திரு. த.றவினதாஸ், தூதரக அதிகாரிகள் திரு. கே.எஸ். மார்வா மற்றும் திரு.வி. இராஜகோபால் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலணிகளை வழங்கினார்கள்.
இந்திய பிரதித் துணைத்தூதுவர் திரு. சு.தட்சணாமூர்த்தி அவர்களால் பாடசாலை நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்களும் பாடசாலை அதிபர் திரு.சிவனேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அண்மையில் இதே பாடசாலைக்கு விஜயம் செய்த இந்திய பிரதித்துணைத்தூதுவர் திரு.சு.தட்சணாமூர்த்தியினால் பாடசாலை புத்தகப் பைகளும், காகித்தாதிகளும் மாணவர் களுக்கு வழங்கியிருந்தார். அதன்போது பிரதித்துணைத்தூதுவர், இதே பாடசாலையில் கல்வி கற்கும், இந்திய அரசின் வீட்டுத்திட்டப் பயனாளியான செல்வி. கயல்விழி அவர்களின் வீட்டின் கட்டுமானப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire