மாதகல்நெற் வாசகர்களே !
யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டுநிறைவுவிழாவினை முன்னிட்டு மாதகல் நெற் இணையத்தளத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் கவிதைப்போட்டிக்கான (like)13/04/2019 அன்றுடன் நிறைவுபெற்றது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
அவ்வண்ணம் இணையத்தின் வாசகர்களால் அதிக விருப்புகள் வாங்கி ( like) , அவர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த கவிதை இதோ எந்தன் நினைவுகள் உங்கள் நினைவுகளுடன் இணைந்து கொள்ளும் எம் பாடசாலை....
இக்கவி செ.திருசாந்தன்[ராஜா] என்பவரின் சிந்தனையின் படைப்பாகும்.
இவரை நாம் அகமகிழ்ந்து பாராட்டுவதோடு அவருக்கு ஓர் பெருமதிமிக்க நினைவுப்பரிசிலை வழங்குவதுடன், இவரது கவிதை விக்னேஸ்வரா வித்தியாலய நூற்றாண்டு மலரில் இடம் பெறும் என அறியத்தருகிறோம்.

























