…::மரண அறிவிப்பு::…

யாழ் மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும் ரொரன்ரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னத்தங்கம் அவர்கள் 17/05/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், இராசம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமியின் வாழ்க்கைத் துணனவியும், நவரத்தினம், மகேஸ்வரி, விஐயரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற மனோகரன் (ஆசிரியர்), கருணாகரன் (USA),விஐயலட்சுமி (கனடா), குணசேகரன் (கனடா), பாஸ்கரன் (கனடா), சிவசேகரன்(கனடா), விஐயசேகரன்(சந்திரன் USA)
ஶ்ரீசங்கரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சாரதாதேவி, சுபத்திரா, விக்கினராஜா, கலாராணி, சுதர்சினி, விஜயகலா, பேரின்பவதனி ஆகியோரின் அருமை மாமியாரும், நீரஜா, பிருத்வி, சுவேதன், பிரதீபன், பிரபாஜினி, விதுர்ஷினி, தர்ஷிகா, கஜன், திலீபன், கிருஷிகா, அஷ்விகா, அபினயா, ஆரணியா, தரணியா, பிரணவி, கீர்த்தனா ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்று வரை எம்மோடு இருந்தீரே
எங்களின் ஒருவராய் அன்போடு வாழ்ந்தீரே, அம்மம்மா
காலமெல்லாம் எமக்கு கண்ணீரை தந்து விண் உலகம் சென்றீரே
உங்களை கடவுள் எனக்கு நீ வேண்டும்
என களவாடி சென்று விட்டானே அம்மம்மா
உங்களை விட்டு கொடுக்க முடியவில்லை என்றாலும்
உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்..