திரு.புண்ணியமூர்த்தி ஆனந்தமூர்த்தி
…::மரண அறிவிப்பு::…
மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து Oxford பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம்பெற்று, கனடாவில் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் அன்பாக வாழ்ந்துவந்த புண்ணியமூர்த்தி ஆனந்தமூர்த்தி அவர்கள் 2020-05-17ஆம் திகதி இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற புண்ணியமூர்த்தி இராசம்மாவின் சிரேஷ்ட புத்திரனும் காலம்சென்ற சிற்றம்பலம் அன்னம்மா அவர்களின் மருமகனும். அன்னம் அவர்களின் ஆருயிர்கணவரும், மனோ (ஆஸ்திரேலியா), கரு (கனடா), ஐங்க் (கனடா), வனசா (கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும், பூமகள், மரியம், ஸ்கொட், அவர்களின் அன்பு மாமனாரும், காலம்சென்ற கருணானந்தமூர்த்தி, விஜயாம்பாள், குருமூர்த்தி, மற்றும், கமலாதேவி (ஆஸ்திரேலியா), சத்தியமூர்த்தி (ஆஸ்திரேலியா),கிருஷ்ணமூர்த்தி (ஆஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2020-05-21 அன்று இந்துமுறைப்படி ஒட்டாவா கனடாவில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்,
பாசமிகு மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு 0094776913108