அமரர் தங்கராசா யோகேஸ்வரி

0 comments

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:06/07/2023.

எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உன் நினைவுகளுடன்

பாசமும் பரிவும் தந்து
பார்த்துப் பார்த்து வளர்த்தது
பசுமையான நினைவுகளாய் இருக்கிறதே

உங்கள் அன்பின் ஆழம்தான்
இன்றும் எம் விழியோரங்களில்
கண்ணீர்த்துளிகளாய் கசிகின்றது

நீங்கள் எங்களை ஒருபோதும்
விட்டு விடவில்லை நீங்கள் எப்பொழுதும்
எங்களுடன் தான் இருக்கின்றீர்கள்!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...!!!

தகவல்: குடும்பத்தினர்



யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் ஆறு ஆனாலும் உம்
நினைவுகள் புரலாது எம் இதயத்தில்

நினைவுகள் புரலாது எம் இதயத்தில்

அன்னை என்று நாம் அழைத்திட
யாருண்டு இவ்வுலகினில்
நம்மை விட்டு ஏன் பிரித்தான் இறைவன் உம்மை?
கண்ணை இமை போல்
காத்த எம் அன்னை காணவில்லை!

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!

கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா!

ஆறிரு கரங்கள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உம் அன்புக்கரம் தேடி
அலைகின்றோம் நாம்

இன்று எம் அன்னை எமை
விட்டு விண்ணுலகம் சென்றாலும்
உம்மை என்றும் எண்ணியே
எம்முலகம் சுற்றும்!
இவ்வுலகம் உள்ளவரை....

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்




...::5ம் ஆண்டு நினைவஞ்சலி::...
அமரர் தங்கராசா யோகேஸ்வரி 
இறந்த வயது 60 மாதகல்(பிறந்த இடம்) Herne - Germany 
 திதி: 28.07.2020 
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
 அம்மா நீங்கள் என்னுடன் வாழ்ந்த நாட்களும் 
நினைவுகளும் நிலையானவை


நீங்கள் எங்களுக்கு செய்த 
நன்மைகள் எண்ணி முடியாதவை 
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை 
உங்கள் நினைவுகள் 
எத்தனை வருடங்கள் சென்றாலும் 
எம் இதயத்தில் இருந்து அகலாது


அன்பின் இறைவா எமக்கு இப்படியோர் 
அன்பான அம்மாவை தந்ததிற்கு 
எந்நாளும் உமக்கு நன்றி


ஆண்டுகள் ஐந்து ஆனதம்மா 
உங்கள் நிழல்கள் அழியவில்லை 
ஓயாது உங்கள் நினைவு எம்மை 
வந்து துடிதுடிக்க வைக்குதம்மா!


உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 
 தகவல்: குடும்பத்தினர் 

…::1ம் ஆண்டு நினைவஞ்சலி::…

பிறப்பு : 7 டிசெம்பர் 1954
இறப்பு : 5 யூலை 2015

அமரர் தங்கராசா யோகேஸ்வரி
திதி : 25 யூன் 2016


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தங்கராசா யோகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமை அம்மாவே!!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள்
எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்
கணவர், பிள்ளைகள்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 07/ 12 /1954
இறப்பு :05/07/2015

திருமதி யோகேஸ்வரி தங்கராசா
 மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தங்கராசா அவர்கள் 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு வளர்ப்பு மகளும், காலஞ்சென்றவர்களான விசுவநாதன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும், சியாமிளா(ஜெர்மனி), கோகிலா(லண்டன்), சர்மிலா(ஜெர்மனி), கேசவன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மயில்வாகனம், கனீந்திரன், திரோணன்(ஜெர்மனி), தர்ஷிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும், வேதநாயகம்(கனடா), சோமசுந்தரம்(மன்னார்), காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி, மகாலக்சுமி(லண்டன்), பரமேஸ்வரி(மாதகல்), வசந்தகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சதுசன், சயந்தன், மிதுசன், கரணிகா, கரிஸ், கைலாஷ், கௌசியா, கௌதம், கௌசனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 08/07/2015, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Straßburger Straße 3, Herne, Germany

கிரியை
திகதி:புதன்கிழமை 08/07/2015, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி:Straßburger Straße 3, Herne, Germany
தொடர்புகளுக்கு
மயில்வாகனம் — ஜெர்மனி
தொலைபேசி:+492323146147
திரோணன் — ஜெர்மனி
தொலைபேசி:+4915757174416
கனீந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944909945

Aucun commentaire:

Enregistrer un commentaire