Dy Sen vilay
லண்டனில் கடந்த ஆண்டு இறதியில் (டிசம்பர்) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீடகப்பட்ட சடலம் ஈழத் தமிழர் ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்து.
வடமேற்கு லண்டன் பகுதியின் ஈலிங் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குறித்த நபரின் சடலம் பிரித்தானிய காவல்தறையினரின் விசாரணைகள் இடம்பெற்ற பின் ஈலிங் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் இறந்தவர் ஈழத் தமிழரான ஜெயக்காந் இலட்சுமிகாந்தன் (வயது 41)என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் மாதகல் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர் மாவீரர் கப்டன் தேவரூபியின் சகோதரனும் அவார்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக லண்டனில் அகதி தஞ்சம் கோரி வாழ்ந்துவந்த போதும் வீட்டாருடனோ, உறவினர்களுடனோ எந்த தொடர்பு இன்றி இருந்ததாகவும், மன அழுத்தங்களோடு இவர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் (நவம்பர்) மாதம் இவரது தாயார் மாதகலில் தீடர் உடல் உபாதையால் மரணமான ஒரு மாத காலப்பகுதியில் இவரின் இறப்பும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது சாவு எவ்வாறு இடம்பெற்றது என்ற விபரங்கள் இதவரை வெளிவரவில்லை.
இருப்பினும் தற்போது தகவல் அறிந்து வீட்டார் தொடர்பு கொண்டுள்ளமையால்
விசாரணைகளின் பின் இறப்பிற்கான விபரங்கள் வெளிவரும் என்பதோடு சடலமும் வீட்டாரிடமோ அன்றி வீட்டாரின் ஒப்புதலுடன் லண்டனிலோ தகனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகறது.
(www.thamilnaatham.media)