...::சாவு அறிவித்தல்::...
மண்டைதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சென் ஆன்ஸ் வீதி மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் கிருஸ்ணகுமார் 24.12.2020 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன் அன்னலட்சுமி (நல்லம்மா) அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற விநாயகமூர்த்தி (மாதகல் விபுலானந்தர் வீதியை சேர்ந்த விநாயகமூர்த்தி இராசமணி ) அவர்களின் அன்பு மருமகனும் பேரின்பநாயகி( பபி ) (ஆசிரியை, ஆனைக்கோட்டை றோ.க.த.க.பாடசாலை ) அவர்களின் ஆருயிர் கணவனும் யதீஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு தந்தையும் கிருஸ்ணராஜாவின் பாசமிகு சகோதரரும் வினோதினி மற்றும் பாலகிருஷ்ணன்(பாலன் ), வேலும் மயிலும்(றஞ்சன்), குகநாதன்(நாதன் ), தனராஜ், தபோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் சோதிலிங்கம் செல்லாச்சி ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.12.2020 வெள்ளிக்கிழமை மு.ப. 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மானிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0776152322
0777065322
சென் ஆன்ஸ் வீதி
மானிப்பாய்