கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த உதவிப்பொருட்கள் கடந்த வருடம் தொடக்கம் தமிழர் தம் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு "பப்பா ஜெயமேரி அறக்கொடை"நிதியத்தின் ஊடாக இம்முறை 2021ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாதகல் காட்டுப்புலம் பிரதேச வாழ் 151 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ் உதவுதொகைக் கொடுப்பனவானது எனது நண்பன் அன்ரனி (றெட்டி) யால் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 2500/- வீதம் 1500/- பணமாகவும் 1000/-ரூபாவிற்கு பொங்கலுக்குத் தேவையான பானை அகப்பை உட்பட பொங்கல் பொருட்கள் அடங்கிய பொதியும் அனைவர் வீடுகளிலும் மகிழ்ச்சியாக தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தனது தாய்தந்தையரின் பெயரில் உருவாக்கப்பட்ட பப்பா ஜெயமேரி அறக்கட்டளை எனும் நிதியத்தினூடாக அந்தப்பிரதேச கிராமசேவையாளரூடாக இவ் உதவுதொகைக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. தைப்பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடு முகமாக வருடத்தின் தொடக்கத்தில் எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இவ் உதவுதொகைக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.மற்றவர்களுக்கு தங்களாலான அறத்தினை செய்ய வேண்டும். அல்லது அறம் செய விரும்ப வேண்டும். இதனைவிட பல்வேறுபட்ட நலத்திட்டங்கள் "ஊருக்கு கைகொடுப்போம் "எனும் மகுடவாசகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Inscription à :
Publier les commentaires (Atom)







