கனடா நாட்டில் வசிக்கும் மழலைச் சிறுவர்களான அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் செல்வன்.பிரகாசன் றாஜ்குமார் மற்றும் செல்வன். நதிசன் றாஜ்குமார் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களது செலவுக்காக பெற்றோர் வழங்கிய பணத்தில்..!

0 comments

வறிய_பாதிக்கப்பட்ட_மாணவர்களுக்கு கற்றல்_சாதனங்கள்_வழங்கி_வைப்பு...

தொடர்ச்சியாக பலசமூகப் பணிகளை ஆற்றிவரும், #கனடா நாட்டில் வசிக்கும் மழலைச் சிறுவர்களான அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் செல்வன். #பிரகாசன்_றாஜ்குமார் மற்றும் செல்வன். #நதிசன்_றாஜ்குமார் ஆகியோர் ஒன்றிணைந்து தங்களது செலவுக்காக பெற்றோர் வழங்கிய பணத்தில் சிறிது சிறிதாக உண்டியலில் சேர்த்த பணத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வைப்பதற்காக ரூபா 50,000/= தை அன்பளிப்பாக எமக்கு வழங்கியிருந்தார்கள்.

இந்த அன்பளிப்புக்கு அமைவாக #இரு #வேறுபட்ட #உதவிகளாக வறிய குடும்பத்திற்கான அத்தியாவசிய உதவி மற்றும் கல்விக்கான உதவிகள் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில், #முதலாவது உதவித் திட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின், #மண்முனைக் கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் வறுமை நிலையினை கருத்திற்கொண்டு, அவரின் உதவிகோரல் கோரிக்கைக்கு அமைவாக,#முதிரைக்கட்டில், #மெத்தை, #படுக்கை #விரிப்புக்கள், #தலையணை மற்றும் #உலர்உணவுப் #பொருட்கள் என்பன எம்மால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, #இரண்டாவது உதவித்திட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 15 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு #கற்றல் #சாதனங்கள் மற்றும் #புத்தகப்பைகள் என்பன இன்றைய தினம் எம்மால் வழங்கி வைக்கப்பட்டது.

இச்சிறுவயதில் மற்றவர்கள் பால் சிந்தித்து, இவ்வுதவியை நல்கிய கருணை உள்ளங்களான இந்த இரு மழலைகளுக்கும், அவர்களை ஊக்கப்படுத்தி ஒத்துழைப்பினை வழங்கிய பெற்றோரான திரு. திருமதி. #றாஜ்குமார்_தம்பதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாம் மிகக்கஸ்டத்தின் மத்தியில் சேமிக்கும் பணத்தில் தொடர்ச்சியாக எம்மூடாகவும், பலதரப்பட்ட சமூக மட்ட அமைப்புக்களின் ஊடாகவும் பல உதவிகளை, உதவிகள் தேவைப்படும் வறிய மக்களுக்காக வாரி வழங்கி வருகின்ற இக்கருணையுள்ளங்கள் குடும்ப சகிதம் என்றும் நலமுடனும், சுகமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இரு உயர்ந்த மனிதநேய உள்ளங்களை வாழ்த்துகின்றோம்.

நன்றி.!!!

மாதகலை பூர்வீகமாகக்கொண்ட மற்றும் கனடாவை வதிவிடமாகக்கொண்ட செல்வன். பிரகாசன் றாஜ்குமார் அவர்கள் தம் தாய்மொழியான தமிழ் மொழி மீது உள்ள தமது மோகத்தையும், பற்றினையும் காட்டுமுகமாக யூடியூப் சேனலில் தமிழில் பேசி நிறைய காணொளிகளை  பதிவு செய்துள்ளார்.

Tamil Pechalan

https://www.youtube.com/channel/UCS_NJFsEjF9-ALqNPAS9OUQ/videos

இவர் அந்நிய நாட்டில் பிறந்து வளர்ந்தாலும், தம் தாய் மொழியினை நன்கு பயின்று , தரமான உச்சரிப்புடன் அம்மொழியினை கதைத்து வருவதை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும்.

இவர் புலம்பெயர் வாழ் அனைத்து தமிழ் சிறார்களுக்கும் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.

எம் அழகிய தமிழ் மொழி எம் தலைமுறையோடு அழிந்து விடாமல், எமது அடுத்த தலைமுறையினரும் அதை ஆர்வத்துடன் பயின்று பாதுகாக்க வேண்டும்.

"தமிழன் என்று சொல்லடா

        தலை நிமிர்ந்து நில்லடா"














Aucun commentaire:

Enregistrer un commentaire