கவிஞர் திரு. சபா. அருள்சுப்பிரமணியம் அவர்களை வாழ்த்துவதில் எம் மாதகல் நெற் இணையம் பெருமிதம் கொள்கிறது..!

0 comments

 நாம் அந்நிய தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து அந்நிய மொழியினை கதைத்து வந்தாலும், நம் தாய் மொழியாம் தமிழ் மொழி மீது உள்ள அளவு கடந்த பற்றினாலும், எம் மொழி எம்மோடு அழிந்து விடாமல் எம் அடுத்த சந்ததியினருக்கு அதை புகட்டும் கடமை எம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்து நன்கு செயற்படும் மேதகு  திரு. சபா. அருள்சுப்பிரமணியம் அவர்களை வாழ்த்துவதில் எம் மாதகல் நெற் இணையம் பெருமிதம் கொள்கிறது.

இவரது பரிமாணங்கள் மற்றும் படைப்புகளை கூற வார்த்தைகளே இல்லை எனலாம்.

இவர் தனது ஆற்றலின் வடிவாக வெளியிட்ட நூல்கள் மூலம் பயன் பெறுவோர் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ.

அவ்வகையில் இவரது படைப்புகள் அங்கிகாரம் பெற்று இவருக்கு மூன்று விருதுகள் தனையும் பெற்று தந்துள்ளன.

1ஆம் விருது: அமெரிக்கத் தமிழ்ப் பல்கலைக்தின் சிறந்த நூலுக்காக விருது.

2ஆம் விருது: இந்தியாவில் உள்ள மாதாந்த இலக்கிய ஏடான “கவிதை உறவு” என்ற நூல் வழங்கிய சிறுவர் இலக்கியத்திற்கான இரண்டாம் விருதும் பரிசும்

3ஆம் விருது: கனடாக் கவிஞர் கழகம் வழங்கிய “குழந்தைக் கவி வித்தகர்”
என்னும் பட்டம்.

இப்படிப்பட்ட ஓர் சாதனையாளர் மற்றும் படைப்பாளி நம் மாதகல் கிடைத்த ஓர் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

என்றும் வாழ்க உங்கள் பணி

என்றென்றும் நீங்காத நெஞ்சில் இடம் பெற வேண்டும் உங்கள் படைப்புகள் என மனதார வாழ்த்துகிறோம்.





Aucun commentaire:

Enregistrer un commentaire