மாதகல் நெற் இணையத்தளத்தின் 11 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு , மாதகல் மண்ணினை பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி நாட்டை வதிவிடமாகக்கொண்ட திரு. பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் நுணசை வித்தியாலய மாணவச் செல்வங்களுக்கு மதிய உணவும், மதிய உணவு பாத்திரங்களையும் வழங்கியுள்ளார்.
இவருக்கு எமது இணையத்தளம் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு,
இவரது சேவை இறையாசியுடன் இவ்வாறு இனிதே தொடர்ந்திட பிரார்த்திப்போம்.
உங்கள் அபிமான "மாதகல் நெற்" இணையத்தின் 11வது அகவையை முன்னிட்டு , அன்னமிட்டு மக்களை காக்கும் "மக்கள் வாழ உதவும் நிறுவகம்" ஊடாக..!
அன்பான மாதகல் நெற் பிரியர்களே...
உங்கள் அபிமான "மாதகல் நெற்" இணையத்தின் 12வது அகவையை முன்னிட்டு , 01/12/2021 ஆன இன்று அன்னமிட்டு மக்களை காக்கும் "மக்கள் வாழ உதவும் நிறுவகம்" ஊடாக யாழ் மாவட்டத்தில் வாழும் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மதிய போசனம் அளிப்பதற்காக மாதகல் நெற் இணையத்தளத்தின் மற்றும் மாதகல் மக்களின் நலன்விரும்பியான ,மாதகலை சேர்ந்த, தற்போது ஜேர்மனியில் வசிக்கும் திரு.பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் 15000 ரூபாய் தனை அன்பளிப்பாக அளித்துள்ளார்.
அன்றிலிருந்து இன்றுவரை , எம் மாதகல் நெற் இணையத்தின் ஆதரவாளர்களில் ஒருவராக திகழும் திரு பூ.அன்பழகன் அவர்கள் இணையத்தளத்தின் மீது வைத்திருக்கும் பிரியம் எம்மை மெய்சிலிர்க்க வைப்பதோடு, எம்மவர்களுக்கான சேவையினை மென்மேலும் திறம்பட செயற்பட ஊக்குவிக்கிறது.
அதுமட்டுமல்லாது, தம் மண் வாசனை தனை மறவாது, எம் கிராமத்தின் அபிவிருத்திக்காகவும், எம் மக்களின் நலனுக்காகவும் இவர் தமது உதவிக்கரங்களை நீட்ட ஒருபோதும் தயங்கியதில்லை.
இதுவரை காலமும், இவர் எமக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எம் இணையம் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டு, இவரது தன்னலம் பேணாமல், பொதுநலம் காக்கும் நல்லுள்ளம் கண்டு வியந்து, தலைவணங்கி நிக்கிறது எம்மவர்களுக்கான எம் மாதகல் நெற் இணையத்தளம்.
அதே சமயம், மக்கள் வாழ உதவும் நிறுவகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.