பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் அன்பின் பகிர்வையும், சகோதரத்துவ உறவையும் வளர்க்கும் நோக்கிலானதும், கிராம அலுவலக முகாமைத்துவப் போட்டியில் 1ஆவது இடத்தினை பெற்றுக் கொண்ட மாதகல் J/150 பிரிவிற்குரிய கிராம சேவையாளரான திரு பா.ஜேம்ஸ் பொப்ளர் அவர்களிற்கான பாராட்டுடன் கூடிய கௌரவிப்பு நிகழ்வும், மதிய போசன விருந்துடன் கூடிய ஒன்றுகூடல் நிகழ்வு சங்கத்தின் அலுவலக மண்டபத்தில் வியாழன் 30-12-2021அன்று இடம்பெற்றது.
மீண்டும் கொரோணா வைரஸ் எனும் கொடிய நோயுடன் பிறக்கப் போகும் 2022ஆம் ஆண்டு, 11ஆவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்தும் எமது கிராமத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒற்றுமையுடன் செயற்பட உறுதி எடுத்துக் கொள்வோம்.
இந்த நிகழ்வில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு வி. சிற்றம்பலம் அவர்கள், செயலாளர் திரு ம.ஜெறாட் அவர்கள், சங்கத்தின் கணக்காளரும், மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் அதிபரும் ஆகிய திரு யோ.எ.பங்கிறாஜ் அவர்கள், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர் செல்வி சுலோசனா அவர்கள், மாதகல் நுணசைப் பாடசாலையின் அதிபர் திரு ஆறுமுகறஞ்சன் அவர்கள், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் திரு தணிகாசலம் அவர்கள், மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் உப அதிபர் திரு கு. வரதன் அவர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் முன்நாள் தலைவர் திரு சந்தியாப்பிள்ளை அவர்கள் மற்றும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மாதகல் J/150 பிரிவிற்குரிய கிராம சேவையாளரான திரு பா.ஜேம்ஸ் பொப்ளர் அவர்களும், மாதகல் J/151 பிரிவிற்குரிய கிராம சேவையாளரான திரு விக்னபவன் அவர்களும், மாதகல் J/152 பிரிவிற்குரிய கிராம சேவையாளரான திரு சுஜீவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறப்பிடத்தக்கது.