பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளினை கருத்தில் எடுத்து பிரதிகளெடுப்பதற்குரிய இயந்திரத்தினை [Photocopie machine] வாங்குவதற்காக, செயற்குழுவின் முடிவுடன் ஒரு இலட்சத்து அறுபத்தாறாயிரம் [1,66,000]ரூபா வங்கி மூலம் 12-11-2021 அன்று கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.
பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தின் தேவைகளிற்கும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தேவைகளிற்கும் , இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தேவைகளிற்கும் இதன் பயன்பாடு இருக்க இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உறுதிமொழியும் 07-11-2021 அன்று கடிதத்தின் மூலம் கிடைத்தது.
பிரதிகளெடுக்கும் இயந்திரம் 17-12-2021 அன்று கொள்வனவு செய்யப்பட்டு, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் 3 அமைப்புக்களின் பயன்பாடுகளிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.