பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 18 ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்  சங்கத்தின் 18 ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி ஞாயிறு 19-06-2022 அன்று  நடந்தது. 

 அன்றைய  நிகழ்வுகள் பற்றிய  ஓர் சிறிய ஒளித்தொகுப்பு : 

                   இன்றைய நிகழ்வில் எமது சங்கத்தினைச் சேர்ந்த செல்வி சிவகுமார்  மதுயாழினியும், சுரேந்தினியும் எமது சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, எதிர்கால செயற்பாடுகள் பற்றி, விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இவர்களிற்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்  சங்கத்தின் 18 ஆவது வருடாந்த விளையாட்டுப் போட்டி ஞாயிறு 19-06-2022 அன்று காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5  மணியளவில்  நிறைவடைந்தது.
 
இந்த  நிகழ்வில் எமது சங்கத்தின் அங்கத்தவர்களும், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களும்  விளையாட்டுப் போட்டிகளில் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வினை  எமது சங்கத்தின் விளையாட்டு துறைப் பொறுப்பாளர் திரு தவனேஸ்வரன், உதவிப் பொறுப்பாளர்களான திரு கோபிநாத்,  திரு டிலக்சன் , செல்வி ஆரணி ஆகியோர்  திறம்பட நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஓட்டப்போட்டிகள், அஞ்சல் ஓட்டப்போட்டிகள்,  நீளம் பாய்தல், தட்டெறிதல், சாக்கோட்டம், உதைபந்தாட்டப்போட்டிகள்,  மற்றும் பல விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு, 18 வயதிற்கு  மேற்பட்ட அனைவரிற்கும் பரிசில்கள் உடனடியாகவே  வழங்கப்பட்டது. 
 
மர்லி லு றுவா நகரசபை  17 வருடத்திற்குப் பின்னர், முதல் தடவையாக, எமக்கு இலவசமாக  STADE DE CHENIL விளையாட்டு மைதானத்தினை  தந்தமைக்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. 

இன்றைய நிகழ்விற்கு எமது சங்கத்தினை சேர்ந்த பலர் குளிர் பானங்கள், தேநீர், பலகார வகைகளை அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரிற்கும் எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

முக்கியமாக, மதிய உணவிற்குரிய செலவினை, எமது சங்கத்தினைச் சேர்ந்த திருமதி வாணிதாசன் சற்குணராணி அவர்களும், திரு வடிவழகாணந்தன் சுரேசா [கண்ணன்] அவர்களும் பொறுப்பெடுத்தமைக்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

                   இன்றைய நிகழ்வில் எமது சங்கத்தினைச் சேர்ந்த செல்வி சிவகுமார்  மதுயாழினியும், சுரேந்தினியும் எமது சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு, எதிர்கால செயற்பாடுகள் பற்றி, விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். இவர்களிற்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.









































































Aucun commentaire:

Enregistrer un commentaire