மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாத் திருப்பலி 20/01/2023 வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது..!

0 comments


புனிதரின் பெருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட நிதியாளர் அருட்தந்தை நேசநாயகம் அடிகளார் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.புனிதரின் திருச்சுருபத்தை மாதகல் மண்ணின் மைந்தனும் புனித செபஸ்ரியார் ஆலய முதற் குருமணியுமாகிய அருட்தந்தை லியான்ஸ் அடிகளார் பவனியாக எடுத்து வந்தார்.இறுதியாக மாதகல் பங்குத்தந்தை அருட்பணி றோஜ்பேடினன் அடிகளாரால் புனிதரின் திருச்சுருப ஆசீரும் வழங்கப்பட்டது.































மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பெருவிழாவிற்கு முன்னைய நாளான 19/01/2023 அன்று நற்கருணைப் பெருவிழாத் திருப்பலி மண்ணின் மைந்தன் அருட்தந்தை சுமன் அடிகளார் தலைமையில் இடம்பெற்று தொடர்ந்து, அருட்தந்தை அமிர்தராஜ்(OMI)அடிகளாரால் நற்கருணை வழிபாடும் இறுதியில் மண்ணின் மைந்தனும் புனித செபஸ்ரியார் ஆலய முதற் குருமணியுமாகிய அருட்தந்தை லியான்ஸ் அடிகளாரால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.

மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு புனிதரின் கொடியேற்ற நிகழ்வுகள்




















 

Aucun commentaire:

Enregistrer un commentaire