பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர் குடும்பமான திரு, திருமதி றஞ்சன் கடம்பமலர் அவர்களின் மகளான செல்வி ஸ்ரீறாஜி [றாஜி] அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் (Ste AMPLEGEST) மூலம் எமது சங்கத்தின் வேலைத்திட்டங்களிற்கென 5ஆவது தடவையாகவும் பெருந்தொகை நிதியினை 2022ஆம் ஆண்டிலும் அன்பளிப்பு செய்துள்ளார். இதற்கான உறுதிப்படுத்தல் கடிதத்தினை கணக்காளர் திரு குகனேஸ்வரன் அவர்களிடம் வழங்கினார்.
இவரின் இந்த முயற்சிக்கு எமது சங்கம் பாராட்டுக்களையும்,
நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இவரின் எண்ணத்தில், இந்த உதவிக்கு எமது
சங்கத்தினை தெரிவு செய்தமை புலம் பெயர் மண்ணில் பிறந்த
எமது கிராமத்தின் இளைய சந்ததியினரிற்கு எடுத்துக்காட்டாகும்.
இந்த விடயத்தில் எமது சங்கத்தின் முக்கிய நோக்கம் வெற்றியடைந்துள்ளது என்பதை எண்ணி பெருமிதம் அடைகின்றது.
இவரது செயலினைப் பாராட்டுவதற்காக, உடனடி நிகழ்வாக, எமது சங்க நிர்வாக கூட்டம் ஞாயிறு 19-02-2023 அன்று கூட்டப்பட்டு, அங்கு செல்வி ஸ்ரீ றாஜி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். நிர்வாக உறுப்பினர் செல்வி இராமச்சந்திரன் கார்த்திகா அவர்களால் மலர்ச்செண்டு வழங்கப்பட்டு, நிர்வாக உறுப்பினர் செல்வி ஆறணி அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
நிர்வாகக் கூட்டத்தின் ஏகோபித்த முடிவுடன், இவரிற்கு எமது சங்கத்தில் 2023ஆம் ஆண்டிலிருந்து கௌரவ நிரந்தர அங்கத்தவர் நிலையினை, சந்தாப்பணமில்லாது, வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)