மாதகல் இந்து போதி மயானத்தின் தற்போதைய நிலமை..!

0 comments

மாதகல் மக்களின் புனித இடமான J/150, J/151, J/152 பிரிவுகளை உள்ளடக்கிய மாதகல் இந்து போதி மயானத்தின் தற்போதைய நிலைமைக்கு யார் காரணம்,  வலி தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள போதி மயானத்தின் நிலைமை.
ஒவ்வொரு தகனக்கிரிகைக்கும் ஏழை பணக்காரர் என்று பாரபட்சம் இல்லாமல் பணம் அறவிடுகிறார்கள், பணம் கட்டினால் திறப்பு கைகளுக்கு தருவார்கள்.
தகனக்கிரிகை செய்யும் கொட்டகை தகரங்கள் கழன்று விழுந்து தேடுவார் இல்லாமல் இருக்கிறது, மழைக்காலம் எரிக்க முடியாத நிலைமை.
மக்கள் இளைப்பாறும் மண்டபத்தில் ஆடு, மாடுகளை கட்டி அசுத்தமாக இருக்கிறது. மக்கள் இளைப்பாற முடியாத நிலைமை (பூட்டி இருக்கும் மயானத்தில் எப்படி ஆடு, மாடுகள் கட்டப்படுகின்றது),
மரங்கள் வெட்டப்படுகின்றது (யாரால் வெட்டி மொட்டை அடிக்கப்படுகின்றது),
மயானம் பற்றைகள் வளர்ந்து காடாக காட்சி அளிக்கின்றது.
மயானத்தில் நன்னீர் கிணறு எவ்வித பராமரிப்புகளும் இன்றி அழிவடைகின்றது.
தனிநபர் ஒருவரால் சில வருடத்திற்கு முதல் நடப்பட்ட தென்னங்கன்றுகள் ஆடு மாடுகளால் அழிவடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு, பிரதேச சபையால் மக்களிடம் ஒவ்வொரு தகனக் கிரிகைகளுக்கும் பணம் அறவிடப்படுகின்றது. இப்பணத்தை வைத்து ஏன் பராமரிக்க முடியாதுள்ளது? ஊரில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அவர்களுக்கும் இதில் அக்கறை இல்லையா அல்லது வேறு ஏதாவது நோக்கங்கள் இருக்கின்றதா என எண்ணத் தோன்றுகின்றது, சம்பத்தப்பட்டவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கூறுகிறார்கள்.


























 

Aucun commentaire:

Enregistrer un commentaire