மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறவுள்ள நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக..!

0 comments
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறவுள்ள நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வாக முன்பள்ளி மழலைகளுக்கு இலவசமாக பூங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு 23.03.2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
மாதகல் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் சா. அருள்ஞானானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிவஸ்ரீ உலகேஸ்வரக் குருக்கள், மாதகல் பங்குத் தந்தை அருட்பணி றோய் பேடினன்ட் அடிகளார் மற்றும் J/150, J/151, J/152 கிராம சேவையாளர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,  சண்டிலிப்பாய் பிரதேச செயலக Y.S.O றஜீபன், 
ய. ஹிந்துஷா(சுகாதார வைத்திய அதிகாரி சண்டிலிப்பாய்), 
வி. வனிதா(சித்த மருத்துவ அதிகாரி), மாதகல் நலன்புரிச்சங்கச் செயலாளர் மா.ஜெறாட், மக்கள் வாழ உதவும் நிறுவனத்தின் உறுப்பினர்கள், கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கனடா மாதகலைச் சேர்ந்த சி. குகபரன், வை. தணிகாசலம், சுவிஸ் மாதகலைச் சேர்ந்த சி. தயாழினி, விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர் வசந்தகுமாரி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மாதகலில் உள்ள  சித்தி விநாயகர் முன்பள்ளி, புனித தோமையார் முன்பள்ளி, காந்திஜி முன்பள்ளி, சகாய மாதா முன்பள்ளி, சகாயபுரம் கிராம அபிவிருத்திச்சங்க முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மழலைகளுக்கு போஷாக்கு நிறைந்த சத்துமாவும்,  இலவசமாக சாடியுடன் பூங்கன்றுகளும், மூலிகைக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மக்கள் வாழ உதவும் நிறுவனத்தினரால் நிதியுதவி செய்யப்பட்டது.



























































































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire