கடந்த 2022ம் ஆண்டு யாழ் மறைமாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட மறைக்கல்வித் தேர்வு பரீட்சையில் யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயத்தில் தரம் 7ல் கல்வி பயிலும் மாணவி செல்வி நிர்மலன் ஜெகதாஸ் நிலக்ஷனா அவர்கள் 97 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். பாடசாலைக்கும்,கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கும் ,எம் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இம்மாணவியை பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டி நிற்கின்றனர்.
2022 யாழ்மறைமாவட்ட மறைக்கல்வித்தேர்வில் அனைத்து பிரிவுகளிலும் 37 மாணவர்கள் சான்றிதழ் பெறத்தகுதிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதிபர்
யா/மாதகல் சென் யோசவ் ம.வி.