மேற்படி நிகழ்வு 26.04.2023 புதன்கிழமை அன்று மாலை 02.30 மணிக்கு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தலைவர் அருட்பணி றோய் பேடினன் தலைமையில் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கம் கட்டடத் தொகுதியில் இடம் பெற்றது. நிகழ்வின் சுடர்கள் ஏற்றப்பட்டு இறைவணக்கம் நடைபெற்றது. தொடர்ந்து வரவேற்புரையினை மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தொடர்பாளரும் பொருளாளருமான திரு இளைவ் அவர்கள் ஆற்றினார். தலைமையுரையினை மாதகல் சமூக அபிவிருத்திச்சங்க தலைவர் அருட்பணி றோய் பேடினன் அவர்களும் ,செயற்திட்டம் தொடர்பான வெளிபாட்டு உரையினை மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு மா.ஜெறாட் அவர்களும் ஆற்றினார்கள். 09 பயனாளிகளுக்கான ஆடுகளையும், 01 பயனாளிக்கான தையல் இயந்திரத்தையும் நிகழ்வுக்கு சிறப்பாக கலந்து கொண்டிருந்த மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத் தலைவர், மாதகல் நலன்புரிச் சங்க தலைவர் திரு.வி.சிற்றம்பலம், J/151 மாதகல் தெற்கு கிராம அலுவலர் திரு.விக்னபவான், J/150 மாதகல் கிழக்கு கிராம அலுவலர் திரு.பிரதீபன், மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.ஞானானந்தன், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர் திரு.தி.கிருஸ்ணகுமார், J/152 மாதகல் மேற்கு சமூர்த்தி அலுவலர் திரு.றொபின்சன், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தொடர்பாளர் திரு.பெ.கிளைவ், மாதகல் சமூக அபிவிருத்தி சங்க உப செயலாளர் திரு அனுஸ்ட தாஸ் ஆகியோர்கள் வழங்கி வைத்தனர். நிகழ்வின் நன்றியுரையினை மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க உபசெயலாளர் திரு.ஜே. அனுஸ்ட தாஸ் நிகழ்த்தினார். குறித்த நிகழ்விற்கு சிறப்பாக அழைக்கப்பட்டோர். பயனாளிகள் மற்றும் மாதகல் சமூக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



