மாதகலில் இடம் பெற்ற நிகழ்வுகள்..!

0 comments

(10.07.2023) சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட மாதகல் கிராமத்தில் நற்குண முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் அப்பகுதி கிராம மக்களின் பங்குபற்றுதலுடன் அவர்களுக்கான போதை பொருள் தடுப்பு, சிறு குற்றங்கள், சிறுவர் பாதுகாப்பு, ஆபத்தான தொழில்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.











(06.07.2023), மாதகல் சென்ஜோசெப் மகாவித்தியாலயத்தில் "பாடத்தெரிவு மற்றும் தொழில் வழிகாட்டல்" தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோத்தராலும் "உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள்" தொடர்பாக உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தராலும்"பாடசாலையில் முரண்பாட்டு முகாமைத்துவம்" தொடர்பாக மத்தியஸ்தசபை அபிவிருத்தி உத்தியோகத்தராலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.











30.06.2023 ஆகிய ன்று மாதகல் 'விபுலானந்தா சனசமூக நிலையத்தில்'மாதகல் தெற்கு, மாதகல் கிழக்கு,மாதகல் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை உள்ளடக்கி 'புலம்பெயர் தொழிலாளர் சங்கம்' தெரிவு செய்யப்பட்டது.அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படுகின்ற வீடமைப்பு வசதி,சுயதொழில் வாழ்வாதார உதவித்திட்டம் மற்றும் புலமைப்பரிசில் திட்டம் ஆகிய நலனோன்புத்திட்டங்கள் தொடர்பாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.











30.06.2023 ன்று யா/மாதகல் நுணசை மகாவித்தியாலயத்தில் 'பாடத்தெரிவு மற்றும் தொழில் வழிகாட்டல்' தொடர்பாக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தராலும், 'பசுமை உற்பத்தித்திறன் எண்ணக்கரு' தொடர்பாக உற்பத்தித்திறன் மேம்பாட்டு உத்தியோகத்தராலும், 'பாடசாலையில் முரண்பாட்டு முகாமைத்துவம்' தொடர்பாக மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தராலும் விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.












J /151 மாதகல் தெற்கு பிரிவில் இன்று 27/06 2023 காலை 8.00 மணிக்கு மாதகல் சென். ஜோசெப் மகா வித்தியாலயத்தில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமும் அதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது. இதில் பொதுச்சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பாடசாலை சமூகத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










(26.06.2023) சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாதகல் சென் தோமஸ் வித்தியாசாலையில் போதை ஒழிப்பு, மகிழ்ச்சியான குடும்பம், முறைப்பாட்டு பொறிமுறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு. சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்டது.










 கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக மாதகல் கடற்படை , கிராம உத்தியோகத்தர்கள் , கடற்தொழிலாளர் சங்கங்களுக்கிடையிலான கலந்துரையாடல் மாதகல் கடற்படை முகாம் வளாகத்தில் இன்று(2023:06:19) இடம்பெற்றது. இதில் கடற்தொழிலாளர்களின் பல பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.







வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாதகல் சகாயபுரம் கிராமத்தில் இளைஞர் யுவதிகளுக்கு Aari work பயிற்சி நெறி வழங்கப்பட்டது. அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக Saree blouse வடிவமைத்தல் பயிற்சி நெறி கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி அனுசரணையில் இன்றையதினம் (14-06-2023) பிரதேச செயலர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம அலுவலர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,தையற் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர். இதில் பயிற்சி நெறி க்காக 17 இளைஞர் யுவதிகள் இணைந்திருந்தனர்.











Aucun commentaire:

Enregistrer un commentaire