அமரர்.சுப்பிரமணியம் தர்மகுலசிங்கம்(குலம்)

0 comments



யாழ். யாதம்பை மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், ஜேர்மனி Krefeld, Kempen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மகுலசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்பே உருவான எங்கள் அப்பா
 நாட்கள் 31 ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!! 


உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் வீட்டுக்கிருத்திகை 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 முதல் பி.ப 02:00 மணிவரை நடைபெறும். பின்னர் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Pfarrzentrum Christ König Concordienplatz 12, 47906 Kempen எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாரு அனைவரையும் கேட்டுக்கொள்ளபடுகின்றோம். 


இங்ஙனம், குடும்பத்தினர் 








யாழ். யாதம்பை மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு செல்வபுரம், ஜேர்மனி Krefeld, Kempen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தர்மகுலசிங்கம் அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சின்னத்துரை), அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சத்துருசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதிவதனி அவர்களின் ஆருயிர் கணவரும்,

டாரணி, நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றமணன், பிரசாத் ஆகியோரின் அருமை மாமனாரும்,

விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் அருமைப் பேரனும்,

சற்குணலீலா(கனடா), சாந்தகுமார்(கனடா), மகேஸ்வரன்(கலிபோர்னியா), ஞானசக்தி(கனடா), ஞானபாலன்(கனடா), தவக்குமாரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

தவராஜா, கருணைராணி, செல்வராஜா, மோதிலா, விசாகேந்திரன், ரவிச்சந்திரன், திருவதனி, சிவவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

லோஜி, மயூ, ராஜி, புவி, றயனி, சீலன், மாலினி, முரளி, தினேஷ், யோகினி, ஷோபிகா, செல்வன், ஹம்சிகா, சலக்‌ஷன், கஜன், சஞ்சயன், சச்சின், ஆரணியா, சரண், காருணியா ஆகியோரின் ஆசை மாமனாரும்,

கௌதமி, சந்துரு, ஜயந்தன், மகிஷா, கோபி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

ஹரிஷான், சுகிஷ், டருண், மதுஜா, துஷான், மதுஜான், சோபியா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஜதுன்யா, மிதுன்யா, சதுஷா, லக்சியா, பிரபாகரன், சாள்சன், அனிஷ்கா, ஹஸ்னிகா, லயா, டியா, கிஷோத், ஜாஸ்மின், லக்‌ஷ்மன், அஹானா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

 RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

டாரணி - மகள்
நர்மதா - மகள்
றமணன் - மருமகன்
பிரசாத் - மருமகன்


Aucun commentaire:

Enregistrer un commentaire