வைத்திய கலாநிதி சண். சுந்தர் (USA) திலகா தம்பதிகளை கௌரவிக்கும் நிகழ்வு மதத்தலைவர் களின் ஆசியுடன் 01.08.2023 அன்று சிறப்புற நடைபெற்றது..!

0 comments
Dr.T.ரசில்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி 
கேதீஸ்வரன், IMHO. இலங்கைக்கான பணிப்பாளர் கிருஷ்ணகுமார், மாதகல் வைத்தியர்கள் மாதகல் மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


""சமுகசேவகர் Dr.சண்முகசுந்தரம் ஐயா (அமெரிக்கா) வாழ்த்துக்கவி"
" அலைபேசியில் அவசரமாய் வந்தது ஒரு அழைப்பு .
அண்ணல் பெருமகனாரை நீ வாழ்த்தி ஒருகவியென வைத்தியநண்பன்.
ஆதவன் எழும்பொழுதில் அவசரமாய் வரைந்தேன் ஒருகவி.
அன்புகொள் பெருமகனாரை வாழ்த்த கவியேது.
அல்லல்படும் மக்களை ஆதரித்த வள்ளலே.
சண்முகசுந்தரரென அவதரித்தீர் அவனியில்.
சரித்திரம் பேர்சொல்ல சாதித்து காட்டினீர்.
சாதித்தது மட்டுமல்ல போதித்த பள்ளிக்கு அள்ளிவழங்கினீர்.
தமிழர்கள் தலைநிமிர விடுதலைக்காய் விரைந்து கொடுத்தீர்.
தன்மக்கள் ஊரும் சிறக்க தடையின்றி அளித்தீர்.
கொடையில் கர்ணனை கதையில் கண்டோம்.
கொடைக்கே அடையாளமென தங்களையே கண்டோம்.
கொடைக்கு மனம் வேண்டும் அதொடு குணமும் வேண்டும்.
அதெல்லாம் பெருந்தகை உமக்கு அழகாய் அமைந்தது.
மாதகல் எழவேண்டும் மக்கள் மிளிரவேண்டுமென.
மாண்புறு சிந்தை கொண்டீர்கள் மறுப்பின்றி நின்றீர்.
அமெரிக்காவில் வைத்தியநிலையம் போலே.
அருமை மண்ணிலும் உதயமாகியதே வைத்தியநிலையம்.
பெருந்தகையே உம்பணிக்கு உறுதுணையாய் நின்றார்.
பாரியார் அன்னையும் உரமென உறுதிதந்தார்.
பேசப்பேச இன்னமும் பேசிடலாம்.
நிறுத்துகிறேன் இத்தோடு வணங்குகிறேன் அன்போடு.
நீங்கள் வாழ்கவே அன்னையும் வாழ்கவே .
பெருந்தகை தாங்கள் நீண்டுநிலைக்கவே.
-நன்றி --
மாதகல் மயூரன்.
இன்றையதினம் மாதகலை சேர்ந்தவரும் இலங்கையில் சத்தமில்லாமல் சமூகசேவையில் ஈடுபடுபவரும் மாதகலுக்கு பலதுறைகளுக்கு தமிழ்விடுதலைக்காய் சொத்துகளை அர்ப்பணித்தவரும் அமெரிக்காவின் மிகபெரும் வைத்தியசாலையின் உரிமையாளரும் அமெரிக்காவின் பெரும் வைத்திய நிபுணருமாகிய வைத்தியகலாநிதி சண்முகசுந்தரம் ஐயா அவர்களை மண்ணில் கெளரவிக்கும் பேறு எமக்கும் கிடைத்தமை சிறப்பு.











































































 

Aucun commentaire:

Enregistrer un commentaire