இக்கணினி மையமானது எம் கிராமத்தில் மாணவர்களுக்கு கணினிக் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்குடன் மாதகல் புனித தோமையார் ஆலயப் பங்கைச் சேர்ந்த அமரர்களான சிங்கராயர் பத்திநாதர், சிசிலியா தம்பதியினர் நினைவாக புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் அவர்களது பிள்ளைகள் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
மேலும் அவர்கள் இத்திறப்பு விழாவிற்கு நேரில் வருகை தந்து பங்குத்தந்தை வண. றோய்பேடினன் அடிகளாருடன் இணைந்து கணினி மையத்தைத் திறந்து வைத்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
இக்கணனி மையத்தை அமைத்துத் கொடுத்த அமரர்களான பத்திநாதர், சிசிலியா தம்பதியினரின் பிள்ளைகளுக்கு மாதகல் புனித தோமையார் கல்வி அபிவிருத்திக் குழுவினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணையும்,மக்களையும் நெஞ்சமதில் நினைத்து எம் மாணவர்களுக்கு செய்த இவர்களது இச்சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறிநிற்கின்றோம்.























