முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலகத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் பிரதேச செயலாளர் தலைமையில் (28) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், பொதுவைத்தியம், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பியல் மற்றும் இரத்தப் பரிசோதனை ஆகியன இடம்பெற்றன.
இவ் இலவச மருத்துவ முகாமில் 248 முதியோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சண்டிப்பாய் பிரதேச செயலகத்தின் ஒழுங்கு படத்தலில் சண்டிலிப்பாய் இந்து கல்லூரியில் 28.10.2023 சனிக்கிழமை அன்று முற்பகல் 08:00 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது எமது கிராமத்தைச் சேர்ந்த "60 வயதுக்கு மேற்பட்ட" முதியோர்களும் இதில் பங்கு பற்றி பயனடையும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
28.10.2023 சனிக்கிழமை நடைபெற உள்ள மருத்துவ முகாமிற்கு முதியோரை அழைத்து செல்வதற்காக இலவச பேருந்து சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாதகல் அந்தோனியார் ஆலய முன்றலில் நின்று இப்பேருந்து சேவையினை பெற்றுக்கொள்ளலாம் என்பதனை அறியத்தருகின்றார்கள்
பேருந்து பயணப் பாதை தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை தொடர்புகொள்ள முடியும்.
Route 3 & 4 :-
திரு.மேகலன் - 0777716494
திரு.புரந்தகன் - 0779141845
திரு.ஞானரூபன் - 0757367635
மேலதிக விபரங்களுக்கு:- திரு.டுபின்சன் - 0779509975
பிரதேச செயலகம்
சண்டிலிப்பாய்
.jpg)
.jpg)