டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகலில் தெற்கு J/151 கிராம செயலகக் கட்டிடம் அமைப்பதற்காக 1,00,000ரூபா நிதியுதவி வழங்கல்...!

0 comments
மாதகல் கலைமகள் சனசமூக நிலையத்தால் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஊடாக டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் நிதியுதவி கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய டென்மார்க் மாதகல் நலன்புரிச்சங்கம் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 100000(ஒரு லட்சம்)ரூபாவினை மாதகல் தெற்கு J/151 கிராம செயலகம் அமைப்பு வேலைகளுக்காக 03.08.2023 அன்று மாதகல் நலன்புரிச் சங்க அலுவலகத்தில் வைத்து, விடுமுறையில் மாதகலிற்கு சென்றிருந்த பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர் திரு செ.கிருசாந்தன் அவர்கள் மூலம்  கலைமகள் சனசமூக நிலைய பொருளாளர் திருமதி கோமதி அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.


                      இந்நிகழ்வில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் திரு ஐங்கரன், செயலாளர் திரு மா.ஜெறாட் , பொருளாளர் திரு ஞானபண்டிதர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







 

Aucun commentaire:

Enregistrer un commentaire