பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும் "பசுமையில் மாதகல்" நிகழ்ச்சித் திட்டம் 2023ஆம் ஆண்டில் 6ஆவது வருடாந்த நிகழ்வாக....

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இலங்கை  மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும் "பசுமையில் மாதகல்" திட்டத்தினூடாக மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 19-11-2023 அன்று காலை 9மணிமுதல் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் மாலை 1 மணி வரை நடைபெற்றது. 

எமது கிராமத்தில் பெய்த அடைமழை காரணமாக  "பசுமையில் மாதகல்" நிகழ்வினையொட்டி நடாத்தப்பட்ட கேள்விகள், கட்டுரைப் போட்டிகளின் பரிசளிப்புக்கள், கத்தோலிக்க சமய, சைவ சமய குருமார்களின் ஆசியுரைகள், சிறப்பு விருந்தினராக பங்குபற்றிய டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பொறுப்பாளர் திரு ஸ்ரீ கதிர்காமநாதன் அவர்களின் உரை, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் திரு ஐங்கரன் அவர்களின் உரை, அத்துடன் அச் சங்கத்தின் செயலாளர் திரு ஜெறாட் அவர்களின் உரை, யாழ் கமல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் திருமதி பிரணவன் தெய்வநாயகி அவர்களின் உரை போன்ற நிகழ்வுகள் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையிலும், இலவசமாக மரக்கன்றுகள வழங்கும் நிகழ்வுகள் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்திலும் இடம்பெற்றது.

இ்றைய தினம் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்துடன் இணந்து மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த சிறிய திட்டத்தின் மூலம் மாதகல் மக்கள் பயன்பெறுவதுடன், முக்கியமாக பூமிப்பந்தின் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கு எமது கிராமமும் இணைந்து ஓர் சிறிய பங்களிப்பதென்பதில், எமது சங்கத்தின் கடமை என்பதை உணர்ந்து, பெருமை அடைகின்றது.


































































































 பசுமையில் மாதகல் மரநடுகை செயற்திட்டம் தொடர்பாக நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டி முடிவுகள்..!

 பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இலங்கை  மாதகல் நலன்புரிச் சங்கமூடாக நிகழ்த்தும் "பசுமையில் மாதகல்" திட்டத்தினூடாக மாதகல் மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 19-11-2023 அன்று காலை 9மணிமுதல் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெறும். 

இந்த சிறிய திட்டத்தின் மூலம் பூமிப்பந்தின் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கு எமது கிராமமும் பங்களிப்பதென்பதில் எமது சங்கத்தின் கடமை என்பதை உணர்ந்து, பெருமை அடைகின்றது.

பதிவு செய்யும்  திகதி : 31-10-2023 முதல் 10-11-2023 வரை

பதிவு செய்யும் நேரங்கள் :
திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மாலை 3 மணி முதல் மாலை 5மணி வரை 
சனி, ஞாயிறு  : காலை 9மணி முதல் காலை 11 மணி வரை , மாலை 3மணி முதல் மாலை 5மணி வரை

பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவின் படி மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire