யா/ மாதகல் நுணசை வித்தியாலய சமையலறை திருத்துவதற்காக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் நிதி உதவி கோரி மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு குறித்த பாடசாலை அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பாடசாலையின் சமையலறையின் சுகாதார நலன் பேணலை கவனத்திற்கு கொண்டு உடன் திருத்தம் செய்ய வேண்டிய நிலையுணர்ந்து மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி ரூபா( 160380 ) ஒரு லட்சத்து அறுபதாயிரத்து முன்னூற்று எண்பது 2023.11.19 ஆம் திகதி அன்று யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற 06 ஆவது வருடமாக இடம்பெற்ற பசுமையில் மாதகல் நிகழ்வில் வைத்து பாடசாலை அதிபரிடம் மாதகல் நலன்புரிச் சங்க உப தலைவர் திரு தி. ஐங்கரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் குறித்த பாடசாலையின் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதியும்,பாடசாலையின் பௌதீகவளத் தேவைகளின் வகையிலும் கடந்த காலங்களிலும் நிகழ்காலத்திலும் நிதி உதவிகளை வழங்குவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.