அமரர்.செ.பாண்டித்துரை

0 comments

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/ 00/ 0000
இறப்பு :06/09/2013

செல்லையா பாண்டித்துரை சமூகமூர்த்தி சோதிட ஞானி 


மலேசியா காஜான் என்னும் இடத்தைப் பிறப்பிடமாகவும் நீலியம்பனை மல்லாகத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் இல.14A, முதலாம் ஒழுங்கை, பட்டாணிச்சூர் புளியங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட செல்லையா பாண்டித்துரை (ஓய்வுபெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் அமைப்பாளர், அகில இலங்கை சமாதான நீதிவான், சத்திய ப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்) 06.09.2013 வெள்ளிக்கிழமை வவுனியாவில் சிவபதம் அடைந்தார். அன்னார் யோகபாக்கியத்தின் அன்புக்கணவரும், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் வல்லிபுரம் செல்லையாசெல்ல முத்தம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாதகலைச் சேர்ந்த வன்னித்தம்பி உடையார் செல்லம்மா தம்பதியரின் மருமகனும், கஜநதி (முன்னாள் உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தர், ஆசிரியர், வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), நிகிந்தா, (முகாமைத்துவ உதவியாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்கள தலைமையகம், கொழும்பு), குகஸ்ரீசத்திய சாயிராஜ் (v4Greenz MicroIrrigation and Landscaping) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.09.2013) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப 10 மணியளவில் தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் : குடும்பத்தினர். தொடர்புகளுக்கு குடும்பத்தினர். – 14அ, முதலாம் ஒழுங்கை மன்னார் வீதி, பட்டாணிச்சூர் புளியங்குளம், வவுனியா. , 024 492 0659 



Aucun commentaire:

Enregistrer un commentaire