
பிறப்பு : 11 யூலை 1942 — இறப்பு : 3 பெப்ரவரி 2016
யாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலை விதானையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வாலாம்பிகை அவர்கள் 03-02-2016 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவரஞ்சனி(ஆசிரியை- புத்தூர் சோமஸ்கந்தா), ஜீவமோகன்(க. உயிரவன், உரிமையாளர் Mont Victoria பழக்கடை, அறிவிப்பாளர் ITR மொன்றியல் நிருபர் உதயன்), ராஜமோகன்(வவுனியா), கெங்காதர கீர்த்தி (ஆசிரியர்- அருணோதயாக் கல்லூரி), ஜீவரஜனி(இருபாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), தவராணி(கனடா), விஜயலட்சுமி கலைவாணி(ஆசிரியை- மாதகல் மூணசை வித்தியாலயம்), விமலசிறி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மயில்வாகனம், ஆறுமுகம், வேலாயுதம், பாக்கியம், வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசையா, செல்லத்துரை, சுப்பிரமணியம், மற்றும் அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும்,
சஞ்சிகா, கீர்த்திகா, கோபிகா, விஸ்ணுகா, டிருஷிகா, பகிரதிகா, பைரதிகா, துபீசன், அபிஷன், சுபீசன், கிருசானன், சதுர்சன், சுரேசன், பாகீசன் ஆகியோரன் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இருபாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் செக்கடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உயிரவன் — கனடா
தொலைபேசி: +15148671551
தவராணி — கனடா
தொலைபேசி: +15142790463
மோகன்ஜீவா — இலங்கை
தொலைபேசி: +94778680578
ஈசன் விஜி — இலங்கை
தொலைபேசி: +94774490293
கீர்த்தி வாணி — இலங்கை
தொலைபேசி: +94778889393
விமலசிறி ரஜனி — இலங்கை
தொலைபேசி: +94778087197
துபீசன் — கனடா
தொலைபேசி: +15147174084
கோபிகா — கனடா
தொலைபேசி: +15142392158