போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன இடமாக விளங்கும் மாதகல் கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சியின் குறித்த பகுதியின் நிர்வாக செயலாளருமான அன்ரன் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்..
ஆது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – ‘இந்தியாவிலிருந்து மீன்பிடி வள்ளங்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் மாதகல் கடற்கரையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் தற்பொழுது குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்த வண்ணமிருக்கின்றன.
எனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்குடனும் போதைப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மாதகல் கடற்கரையில் நிரந்தரமான ஒரு பொலிஸ் காவலரண் அமைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்..
யாழ்முரசு இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன…..
ஈழம் - தமிழகம் தொடர்பு...
நம்முன்னோரால் ஏற்படுத்தப்பட்ட திருவாதிரைக் கடன்...
காலங்காலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத்துறைகளில் படகேறுவார்கள்.
தமிழகத்தின் கிழக்குத்துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்து இறங்குவார்கள்.
சிதம்பரம் செல்வார்கள்.
வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.
எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத்துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில்ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச்செல்வார்கள்.
1948க்கு முன்பு இருந்தநிலை இதுதான்.
1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத்தனுஷ்கோடி வந்து, போட்மெயில் தொடர் வண்டி ஏறி,நேரே சிதம்பரம் வந்து, வழிபட்டு, மீண்டும்அதே வழியாகத் திரும்புவார்கள்.
1948க்குப்பின்னர் ஈழத்தின் வட பகுதியில்இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச்சட்டத்துக்கு அமைய வர முடியாது.
1992க்குப்பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல்சேவை நிறுத்தப்பட்டது.
முசுலிம் மக்களுக்கு மெக்கா.
கிறித்தவர்களுக்கு ஜெருசலம்.
கத்தோலிக்கருக்கு வத்திக்கான்.
புத்தர்களுக்கு புத்தகயா.
இந்துக்களுக்குத்திருக்கயிலாயம்.
இவை போன்று ஈழத்துச்சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடியநம்பிக்கைக்கு உரிய கோயில்..tamilthagavalthalam.blogspot