‘சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும்’ நடைபவனி

0 comments



சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாதகலில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை நடைபயனம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
இன்று (11) காலை 8 மணியளவில் மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து தனது தாயின் ஆசிர்வாதத்தோடு நடை பயனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஒரு சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும், நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயனத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.
நடைபயனத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடைபயனத்தை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் தொடர் மழையால் திராட்சைப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.

யாழ். மாவட்டத்தின் உரும்பிராய், மாதகல், நீர்வேலி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் திராட்சைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

ஏனைய பயிர்களுடன் ஒப்பிடுகின்ற போது திராட்சை செய்கைக்கான முதலீடு அதிகளவில் காணப்படுவதால் அறுவடை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பதில் அதிகளவிலான நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாண திராட்சைா் பழத்திற்கு நாட்டில் அதிகளவிலான கேள்வி காணப்படுவதுடன், விவசாயிகள் அதிகளவிலான இலாபத்தினை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போது தொடர் மழையினால் திராட்சைப் பயிற்செய்கையாளர்கள் பாரிய நட்டமடைந்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire