நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நியை அடுத்து மாதகல் வறிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு பல தரப்பிக்களாலும் மாதகல் நலன்புரிச் சங்கத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியுடன் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒவ்வொரு கிராம சேவையாளரின் மூலம் J/150,J/151,J/152 எமக்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியல் மூலம் 120க்கு மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு 31.03.2020 அன்று சிறு அளவிலான அத்தியாவசிய சாமான்கள் வீடுகளுக்குச் சென்று வழங்கிவைக்கப்பட்டன. நாம் கேக்கும் போது எவ்வித மறுப்பும் சொல்லாமல் எங்கலுடன் வந்து பொருட்கள் கொள்வனவு செய்து தந்து வாகன ஒழுங்கு செய்து தந்த J/150 கிராமசேவையாளர் திரு.ஜேம்ஸ் பொப்ளர் அவர்களுக்கும் மற்றும் J/151, J/152 கிராமசேவையாளர் அவர்களுக்கும் மற்றும் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு.குகரவீந்திரன் அவர்களுக்கும் எமக்கு உடணடியாக பண உதவி செய்த இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கும் மற்றும் எமக்கு சாமான்கள் கொள்வனவு செய்து, பொதி செய்து, மக்களுக்கு கொண்டு சென்று கொடுக்க உதவிய திரு.மயூரதாஸ், திரு.கோகில்ராஜ் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Inscription à :
Publier les commentaires (Atom)




















