பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2ஆவது தடவையாகவும், இலங்கை மாதகல் நலன் புரிச் சங்கம் 6 ஆவது தடவையாகவும்..!

0 comments
6 ஆவது கட்டம் :

 பிரான்ஸ்  மாதகல் நலன்புரிச் சங்கம் 2ஆவது தடவையாகவும்,  இலங்கை மாதகல் நலன் புரிச் சங்கம்  6 ஆவது  தடவையாகவும்,  ( புலம் பெயர் நாடுகளில் உள்ள மாதகல் நலன்புரி அமைப்புக்களின் உதவியுடன் ) நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து  6ஆம் கட்டமாக  இலங்கை  மாதகல் நலன்புரிச் சங்கத்தால் j/150, j/151, j/152 ஆகிய கிராம சேவையாளர்களினால் எமக்கு வழங்கப்பட்ட 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களிற்கான பெயர் பட்டியல் மூலம் 360 குடும்பங்களுக்கு " சிறுவர்களுக்குரிய கொரொனா நிவாரண உணவுப் பொதி"  சனிக்கிழமை  18-04-2020 அன்று  வழங்கி வைக்கப்பட்டன.

  கிராமசேவையாளர் j/150
 திரு.ஜேம்ஸ் பொப்ளர் மற்றும் j/151 திரு.விக்னபவன்  ஆகியோரின்  முன்னிலையில்  பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மற்றும் எமக்கு பொருட்கள் கொள்வனவு செய்து, பொதி செய்து, மக்களுக்கு வழங்கி வைக்க பல வழிகளிலும் உதவி புரிந்த இலங்கை  மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கும், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர்  அவர்களுக்கும், மற்றும் மயூரதாஸ், கோகில்ராஜ், குகந்தன், கஜானன், பராபரன், திருக்குமார் ஆகியோருக்கும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த உதவி கிடைக்காத 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக தங்கள் பிரிவிற்குரிய கிராம சேவகர்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம்



















Aucun commentaire:

Enregistrer un commentaire