மாதகல் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் கனடா Toronto நகரில் வசித்தவருமான அமரர் சரஸ்வதி வீரசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அமரர்: சரஸ்வதி அவர்களின் (மகன்) சோமசேகரம் அவர்கள் எம் உறவுகளுக்காக ( 700 ) கனேடி டொலர்கள் 92,000 ரூபாவை வழங்கியுள்ளார்.
நிதி ஒழுங்கமைப்பு: கனடா Mathipalan Manickasingam
ஏற்பாடு: யூலி மற்றும் நிலவன்
இவ் நிதியில் இருந்து இரண்டாவது வழங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் சோழநகர் ராஜன் குடியிருப்பு ஆகிய கிராமங்களில். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டு ஏழ்மை நிலையில் வாழும் 21 குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கு தாலா இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவும் பொருட்கள் வீதம். 21 குடும்பங்களுக்கும் 42,000 ரூபாயில் வழங்கப்பட்டது.
கருணை உணர்வேடு உதவிய சோமசேகரம் குடும்பத்தினருக்கு தாயக உறவுகள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
அமரர்: சரஸ்வதி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.


















