Covid 19 அசாதாரண சூழ்நிலை உதவி வழங்கல். கட்டம்- 48.
ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை லண்டன் , சற்குரு ஶ்ரீ சரவணபாபாவின் ஆசியுடன் வழங்கிய ரூபா ஒரு இலட்சம் நிதி அன்பளிப்பின் மூலம் மாதகல் கிழக்கு J/150 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிபுரம், பிள்ளையார் கோவிலடி,நாவலர் வீதி, மற்றும் மாதகல் கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு அவர்களின் மிகவும் அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உதவித்தொகையினை தந்துதவுமாறு மாதகல் கிழக்கு கிராம உத்தியோகத்தர் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் வைத்து 50 குடும்பங்களுக்கு தலா ரூபா 2,000 உதவித்தொகை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி அன்பளிப்பினை வழங்கிய ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியத்திற்கு வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பிலும் மற்றும் பயனாளிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதுடன். இதுவரை ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதி அன்பளிப்பின் மூலம் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கதாகும்.