விநாயகர் விளையாட்டுக் கழக 30ஆம் ஆண்டு நிறைவினையொட்டி கழக வீரர்களுக்கிடையில் விநாயகர் பிரீமியர் லீக் (VPL) நடாத்தப்படவுள்ள..!

0 comments
போட்டி தொடரின் சிறந்த அணி வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் - பிரகாஷ், அதிகூடிய இலக்குகளை பெற்ற வீரர் - புகழேந்திரரசா
சிறந்த சகலதுறை வீரர்- பிரகாஷ், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - கஜமுகன்
மற்றும் வெற்றிபெற்ற விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்கள் அனைவருக்கும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

போட்டி தொடரின் சிறந்த அணி வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
விநாயகர் வின்னிங் ஸ்டார்ஸ் சார்பாக, சிறந்த துடுப்பாட்ட வீரர்- பகிகரன்
சிறந்த பந்துவீச்சாளர் - சிவதர்சன், விநாயகர் சூப்பர் ஹீரோஸ் சார்பாக
சிறந்த துடுப்பாட்ட வீரர்- சதுர்ஜன், சிறந்த பந்துவீச்சாளர் - பிரியன்
விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் சார்பாக
சிறந்த துடுப்பாட்ட வீரர்- கஜமுகன், சிறந்த பந்துவீச்சாளர் - விஷ்ணுவர்த்தன்

நடந்து முடிந்த லீக் சுற்றின் அடிப்படையில் முதல் 4 போட்டிகளில் தலா 3 போட்டிகளில் வெற்றியீட்டிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் மற்றும் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணியினர் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் 8 ஓவர் நிறைவில் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் நகுலகுமார் (13) மற்றும் விஷ்ணுவர்தனின் (10) உதவியுடன் 4 இலக்குகளை இழந்து 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மேலும் விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணி சார்பாக புகழேந்திராசா 2 ஓவர்களுக்கு 8 ஓட்ட்ங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் அணியினர் அணித் தலைவர் சதுர்ஜனின் பொறுப்புமிக்க துடுப்பாட்டத்தினால் (19) 8 ஓவர் நிறைவில் 45 ஓட்டங்களை 5 இலக்குகளை இழந்து பெற்றுக்கொண்டனர்.

போட்டி சமநிலையில் முடிவுற்றதையடுத்து சூப்பர் ஓவரில் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் கஜமுகனின் அதிரடி ஆட்டத்தினால் 16 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விநாயகர் சூப்பர் ஹீரோஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியினர் VPL -2020 இன் வெற்றிவீரர்களாக தேர்வானார்கள்...

https://vpl.mathagalvsc.com/event/vss-vs-vsh/?fbclid=IwAR0A7v2n8T4iP0ZgHLjf36It-BK6vFeV-JQZ_0tpSp1PXnt7Y5JbdrTLfmk


விநாயகர் பிரீமியர் லீக்கின் முதல் போட்டியில் விநாயகர் சூப்பர் ஹீரோஸ் உடன் விநாயகர் சூப்பர் ஸ்டார்ஸ் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மாதகல் சூப்பர் ஹீரோஸ் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தனர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் மாதகல் சூப்பர் ஸ்டார்ஸ் 41 ஓட்ட்ங்களை பெற்றனர்.
பலப் பரீட்சைகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது களம் விநாயகர் பிரீமியர் லீக் களுக்கான அனைத்து போட்டிகளும் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை எமது கழக மைதானத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம்.




























விநாயகர் பிரீமியர் லீக் போட்டிகள் மற்றும் அணிகள் தொடர்பான விபரங்கள்..
விநாயகர் விளையாட்டுக் கழக 30ஆம் ஆண்டு நிறைவினையொட்டி கழக வீரர்களுக்கிடையில் விநாயகர் பிரீமியர் லீக் (VPL) நடாத்தப்படவுள்ளது. எமது கழக அணிவீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த VPL சுற்றுத்தொடரினை எதிர் வரும் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம் . மேலும் நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை தளர்வடைந்த பின்னர் அனைத்து கழகங்களும் பங்குபெறக்கூடிய வீரா மென்பந்து சுற்றுத்தொடர் நடாத்தப்பட உள்ளது என்பதனையும் உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம் .

Aucun commentaire:

Enregistrer un commentaire