திருமதி இந்திரா சிறிநவா

0 comments

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இந்திரா சிறிநவா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

யாரிடம் சொல்லி அழுவேன்
யாரிடம் அவள்கதை கூறுவேன்
யாரிடம் அவள்முகம் காணுவேன்- இனி
யாரிடம் அவள் தரும் அன்பைத் தேடுவேன்
முடியுமா?...

என் தேவியின்
அன்புக்கும் கனிவுக்கும் முன்னால்
எவராலும் ஈடுசெய்ய முடியுமா?...

தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
தவிக்கின்றேன்.. தள்ளாடுகின்றேன்..
தயங்குகின்றேன்.. என் தவமணியே...

ஆயிரம் அறிவுரை சொல்லி
அகிலத்தைக் காணவைத்தீர்
சோதனை பல தாண்டி- எம்மை
சொர்க்கத்தின் கரைசேர்த்தீர்
எம் அன்னையே....

ஆயிரம் உறவுகளிருந்தென்ன ஆகிடுமா...
உம் அன்புக்கு ஆகவில்லை அலைகின்றோம்- எம்
அன்னையின் அன்புக்காய்... எம் தாயே

நீங்கள் எம்மைவிட்டுச் சென்று
நாட்கள் மாதமாகி இன்று
வருடம் ஒன்றாகிவிட்டது- ஆனால்
இன்றும் எம் கண்முன்ன
 மலையென உம் பூமுகம்- எம் நெஞ்சில்

கண்முன்னே நீ வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எம் முன்னே உம் முகம் என்னாளும் உயிர் வாழும்
எம்மையெல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்ட எம் பாசமிகு குல விளக்கின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

என்றும் உங்கள் நினைவுடன் குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா சிறிநவா அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், நவரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சிறிநவா அவர்களின் பாசமிகு மனைவியும், கேஷி, ஹரிஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும், திலகராஜா, திலகராணி, நேருஜி(லண்டன்), பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவகாமி, மகாலிங்கம், சியாமளா, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சாமினி, லெனின், றொஸ்கி, சீலா, அன்ரலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள் பார்வைக்கு 

Wednesday, 30 Sep 2020 5:00 PM - 9:00 PM 

 Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

கிரியை Thursday, 01 Oct 2020 9:00 AM - 1:00 PM 

Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada 

தொடர்புகளுக்கு சிறிநவா - கணவர்

Mobile : +16132556201  

Mobile : +16132710024   

மகாலிங்கம் - மைத்துனர்  Mobile : +16472336254  

Aucun commentaire:

Enregistrer un commentaire