அமரர்.நல்லையா செல்வநாயகி.

0 comments



யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா செல்வநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவலைகள்
அம்மா நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உங்களை போல அரவணைக்க யாருமில்லையே

நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாங்கள்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்!
அன்பு உள்ளத்திற்கு அதிபதி எங்கள் அம்மா
அன்போடு பழகி நேசத்தோடு அனைவரையும்
அரவணைத்து அன்பை கற்றுக்கொடுத்தவர்
அயலவரையும் உறவுகளையும் உள்ளத்தால் இணைத்து
மனதால் மகிழ்ந்தாய் எங்கள் அம்மாவே
பூமியை விட்டு விடை பெற்றாளும்
எங்கள் மனதை விட்டு அகலவே மாட்டீர்கள்

உம்மை நினைத்து கண்ணீர் விட்டு கதறுகின்றோம்
எம்மை ஆற்றுவாரில்லை
பூத்து உன் கொடிகள் நான்கும்
உன் பிரிவால் தவிக்குதம்மா
மறுபடியும் இவ்வுலகில் உங்கள் முகம் காண்போமா
என் தெய்வத்தை ஏன் எம்மிடமிருந்து பறித்தாயோ
 எம் அன்பைத்தான் முறித்தாயோ
 கோபுரம் சாய்ந்து கொடும்துன்பம்
நிகழ்ந்த இந்த ஒரு வருடநாளில்
வாழும் காலத்தில் உங்களை போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீங்கள் காட்டிய மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா!

நீங்கள் மறைந்து விட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து
ஒருபோதும் அழியாது
உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!!!  

தகவல்: நந்தினி(மகள்)

தொடர்புகளுக்கு

 
நந்தினி - மகள்




..::நன்றி நவிலலும் அந்தியேட்டி அழைப்பும்::..


11.11.2020 எமது அன்பு தெய்வம் எமை மறந்து சென்ற வேளையில் எமக்கு ஆறுதல் கூறி இறுதி நிகழ்வுகளில் கலந்து கொண்டும் ,உள்நாடு வெளிநாடுகளிலிருந்தும்தொலைபோசி முலம் எமக்கு ஆறுதல் கூறி உதவிகள் புரிந்த உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகள் எங்கள் குல விருட்சத்திற்கு அவர் காட்டிய மாளிகையில் நடைபெறும் நினைவஞ்சலியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்..... கணவர் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் நன்றி.



பிறப்பு29 DEC 1949இறப்பு11 NOV 2020

அமரர் நல்லையா செல்வநாயகி

இறந்த வயது 70

மாதகல்(பிறந்த இடம்) திருவையாறு உக்குளாங்குளம்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா செல்வநாயகி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும். ஆலம் விழுதுகள் போல்

ஆயிரம் உறவு கொண்டு

குடும்ப உறவுகள் பிரிந்து விடாதிருக்க

ஆணிவேரான இருந்தீர் அம்மா

சடுதியாய் வந்த காலனின் பிடியில்

பேரக்குழந்தைகள் சுற்றி இருக்க

சோகத்தை தந்துவிட்டு ஏகாதசி

துவாசியில் சொர்க்கவாசல் சென்றது ஏனோ

 அல்லும் பகலும் அயராது உழைத்த எம் தெய்வமே

எமை விட்டு ஏன் மறைந்தாய்

நீங்கள் கட்டிய 2 மாளிகையும் இன்று

நமக்கு பாலைவனம் ஆகிய

தேஉம்மையே நம்பி வாழ்ந்த

உங்கள் கணவன் இங்கே நடைபிணம் ஆகிவிட்டார்

சோகத்தில் உன் கணவன்

பிள்ளைகள் பேரப் பிள்ளைகள்

மருமக்கள் அயலவர்கள் கதறி அழ

சொல்லாமல் போனதென்ன எனது அன்பு மனைவியே

இனி எப்பிறப்பில் காண்பேன்

அம்மா உங்கள் ஆத்மா சாந்தி

அடையட்டும் அம்மா...!முத்துப் பிள்ளைகள் பெற்றாயே அம்மா

கத்தி அழ காலடியில் நிற்க முடியா தூரம்

உன்னைப் பொத்தி வைத்திருக்கும்

நெஞ்செல்லாம் பாரம்

கண்மணியாய் எமைக்காத்த தாயே

கண்களில் நாளும் கண்ணீரின் ஈரம்

வின்னில் நிலவாய் உன் முகம்

மண்ணில் நாம் வாழும் காலம் யாவும்

உன்னில் உயிர் வைத்தோம் அன்னையேமீளாத்துயிலில் நீங்களிருக்க

நீளத் தொலைவில் நாம்

கடைசி நேரம் காணமுடியா துயரம்

நாம் பாலுக்கழுதபோது பசியாற்றிய அம்மா

பாசம் விட்டுப் போனதால் பதறி அழுகிறோம்

வாசம் வீசும் முகத்தால் ஒருதரம் சிரியுங்கள் தாயே

கண்மூடும் பொழுதுகளெல்லாம்

எம்முன்னே நீயேஅம்மா

அப்பாவும் தம்பியும் அங்கே தனியே

தூர தேசத்தில் அழும்

எனக்கும் தம்பிகளுக்கும் ஆறுதல் யார் இனியேஒவ்வொரு மூச்சிலும்எ

ந்தப் பேச்சிலும் அம்மா....அம்மா....

கரைந்து கொண்டிருக்கும் என்கண்களும் அழுகிறது அம்மா..அம்மா...

கணங்கள் யாவும் யுகங்கள் தாண்டியும்

உங்கள் நினைவே தினம் தினம்

நாம் தொழும் தெய்வம் உனையே...விரைவில் என் வீட்டில் குழந்தையாய்

நீங்கள் வந்து தவழுங்கள் தாயே

அமைதியாக உறங்குங்கள் அம்மா

ஓம் சாந்தி ஓம் சாந்தி.....ஓம் சாந்தி ஓம் சாந்தி..... அன்னாரின் சிவபதப்பேறு குறித்த அந்தியேட்டிக்கிரியைகள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று வீட்டுக்கிரியைகள் 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 காந்தகுமார் - மகன்Mobile : +41779837481   கிருஸ்னகுமார் - மகன்Mobile : +94776665010   நந்தினி - மகள்Mobile : +41779975899   நந்தகிருஸ்னன் - மகன்Mobile : +33652615759   சுந்தரலிங்கம் - மருமகன்Mobile : +41797180077

...::சாவு அறிவித்தல் ::...


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா செல்வநாயகி அவர்கள் 11-11-2020 புதன்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,நல்லையா அவர்களின் அன்புத் துணைவியும், நந்தினி(சுவிஸ்), நந்தகிருஸ்னன்(பிரான்ஸ்), காந்தகுமார்(சுவிஸ்), கிருஸ்னகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுந்தரலிங்கம்(சுவிஸ்), கவிதா(பிரான்ஸ்), அஞ்சலா(சுவிஸ்), சுலக்சனா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜந்தன், சுஜேதன், சுலட்சிகா(சுவிஸ்), நிதுர்சிகா, நிதுர்சிகன், கிசோத்(பிரான்ஸ்), டன்சிகா, வினுசிகா(சுவிஸ்), தனுசிகன், திலக்சிகன், கிருசிகன், அஸ்வின்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை 12-11-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில்  இல. 296/1 சிவன்கோவில் வீதி உக்குளாங்குளம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

Address: Get Directionஇல. 296/1 சிவன்கோவில் வீதி, உக்குளாங்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு

 நல்லையா - கணவர்Mobile : +94778695275   

நந்தினி - மகள்Mobile : +41779975899 

சுந்தரலிங்கம் - மருமகன்Mobile : +41797180077

 நந்தகிருஸ்னன் - மகன்Mobile : +33652615759

 காந்தகுமார் - மகன்Mobile : +41779837481

 கிருஸ்னகுமார் - மகன்Mobile : +94776665010  



Aucun commentaire:

Enregistrer un commentaire