நிறுவனம்:யாழ்/ மாதகல் ஞானசிந்தாமணி பிள்ளையார் கோயில்
| பெயர் | யாழ்/ மாதகல் ஞானசிந்தாமணி பிள்ளையார் கோயில் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | மாதகல் |
| முகவரி | மாதகல் மேற்கு, யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
ஞானசிந்தாமணி பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
நிறுவனம்:யாழ்/ மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில்
| பெயர் | யாழ்/ மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் |
| வகை | இந்து ஆலயங்கள் |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | மாதகல் |
| முகவரி | மாதகல், யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாதகல் கிராமத்தில் அமைந்துள்ளது.
நிறுவனம்:யாழ்/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்
| பெயர் | யாழ்/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் |
| வகை | பாடசாலை |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| ஊர் | மாதகல் |
| முகவரி | பிரதான வீதி, மாதகல், யாழ்ப்பாணம் |
| தொலைபேசி | |
| மின்னஞ்சல் | |
| வலைத்தளம் |
மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 1921இல் ஆங்கிலக் கல்லூரியாக பதிவு செய்யப்பட்டது. ஊரவர்களின் உதவியுடன் நிரந்தரமான கட்டிடங்கள் அமைத்து பல வசதிகளுடனும் பாடசாலை இயங்க ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் வண.சகோதரர் எஸ்.பீலிக்ஸ் அவர்கள் ஆவார்.
இப் பாடசாலை 1951இல் மாதகல் சென் ஜோசப் ஆங்கில உயர்தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது அத்தோடு 1961இல் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 56-57
நிறுவனம்:யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம்
பெயர் யாழ்/ மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம் வகை இந்து ஆலயங்கள் நாடு இலங்கை மாவட்டம் யாழ்ப்பாணம் ஊர் மாதகல் முகவரி பனிப்புலம், மாதகல், யாழ்ப்பாணம் தொலைபேசி மின்னஞ்சல் வலைத்தளம் மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் கிராமத்தில் சம்பில்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.
நிறுவனம்:யாழ்/ மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம்
பெயர் யாழ்/ மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் வகை பாடசாலைகள் நாடு இலங்கை மாவட்டம் யாழ்ப்பாணம் ஊர் மயிலிட்டி முகவரி மாதகல் மேற்கு, மாதகல், யாழ்ப்பாணம் தொலைபேசி மின்னஞ்சல் வலைத்தளம் மாதகல் அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதல் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
ஆரம்பகாலத்தில் இப் பாடசாலையானது நுணசை அமெரிக்க மிஷன் பாடசாலை, நுணசை முருகமூர்த்தி படசாலை என்பனவற்றின் இணைப்பால் உருவானது ஆகும். பின்னர் 1970ஆம் ஆண்டில் இரு பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்டு யாழ்/ மாதகல் மேற்கு அரசினர் தமிழ் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கியது.
1979ஆம் ஆண்டு நடைப்பெற்ற அகில இலங்கை இசை நாடக நடனப் போட்டியில் இவ் வித்தியாலய மாணவன் கோ.அருளானந்தன் குணசித்திர பாத்திர நடிப்பில் கனிஷ்ட பிரிவில் அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 14-16
நிறுவனம்:யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை
பெயர் யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை வகை பாடசாலைகள் நாடு இலங்கை மாவட்டம் யாழ்ப்பாணம் ஊர் மாதகல் முகவரி மாதகல், யாழ்ப்பாணம் தொலைபேசி மின்னஞ்சல் வலைத்தளம் மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகலில் அமைந்துள்ளது. றோமன் கத்தோலிக்க திருச்சபையால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஏறக்குறைய 1880ம் ஆண்டளவில் கொட்டில் ஒன்றில் பெண்பிள்ளைகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1893ஆம் தொடக்கம் புனிததோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை எனும் பெயரில் திருக்குடும்ப சபைக் கன்னியர்களால் பொறுப்பேற்று நடத்தப்பட்டது.
1961ஆம் ஆண்டு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றது. எனினும் இப்பாடசாலையின் அதிபர்களாக தொடர்ந்தும் திருக்குடும்பசபை கன்னியர்களே 1994ம் ஆண்டுவரை இருந்து வந்தனர்.
1992இல் ஏற்ப்பட்ட யுத்த நிலமை கரணமாக பாடசாலைச் சொத்துக்கள் ஆவணங்கள் அனைத்தையும் இழந்தநிலையில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது. 1996ம் ஆண்டு சொந்த மண்ணில் இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டபோதும் சொந்தப்பாடசாலைக் கட்டிடத்தில் செயற்பட முடியாத நிலையில் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றது. பின்னர் சேதமடைந்த பாடசாலைக் கட்டிடத்தைக் புனரமைத்து 1998.03.02 தொடக்கம் இப் பாடசாலை இயங்கத் தொடங்கியது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 54-55
நிறுவனம்:யாழ்/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம்
பெயர் யாழ்/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயம் வகை பாடசாலைகள் நாடு இலங்கை மாவட்டம் யாழ்ப்பாணம் ஊர் மாதகல் முகவரி மாதகல், யாழ்ப்பாணம் தொலைபேசி மின்னஞ்சல் வலைத்தளம் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தின் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. மாதகல் மக்கள் மனதில் சைவப் பாடசாலை ஒன்று நிறுவப்படவேண்டும் என்ற எண்ணம் எழவே 1918ஆம் ஆண்டு தை மாதம், கல் வீட்டுப் பொன்னு என்பவரின் இல்லத்தில் திண்ணைப்பள்ளி ஒன்று ஆரம்பமானது. நாளடைவில் இம் முயற்சி தீவிரமடைந்து பிள்ளையார் கோவிலுக்கு மேற்குப் புறமாக உள்ள காணி ஒன்றில் பாடசாலைக் கட்டிடம் அமைக்கப்பட்டு விக்னேஸ்வரா வித்தியாலயம் என்ற பெயருடன் சைவ வித்தியா விருத்திச் சங்கப் பாடசாலையாக கரவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஆசிரியரின் தலமையின் கீழ் விசுவநாதர், சுப்பர் ஆசிரியர்களின் உதவியுடன் இயங்க ஆரம்பித்தது.
1924ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இப் பாடசாலையின் கூரை 1974ஆம் ஆண்டு சீரற்று வுழும் நிலை காணப்பட அதிபர் வீரவாகு அவர்கள் தனது அயராத உழைப்பினால் அரசாங்கத்தின் உதவி பெற்று இதனை திருத்தி அமைத்தார். மேலும் அதன் பின் அதிபர் மு.பரராசசிங்கம் அவர்களும் இப் பாடசாலையை பல வழிகளிலும் மீளமைத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 95-96
யா/ மாதகல் செந்தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலை: பரிசளிப்புவிழா பாடசாலை நாள் சேவைநலன்...
யா/ மாதகல் செந்தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலை: பரிசளிப்புவிழா பாடசாலை நாள் சேவைநலன்... 150px நூலக எண் 60450 ஆசிரியர் - வகை பாடசாலை மலர் மொழி தமிழ் பதிப்பகம் யா/ மாதகல் சென்.யோசப் மகா வித்தியலயம் பதிப்பு 2016 பக்கங்கள் 12 வாசிக்க
- யா/ மாதகல் செந்தோமஸ் றோ. க. பெண்கள் பாடசாலை: பரிசளிப்புவிழா பாடசாலை நாள் சேவைநலன்... (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் -
- நூலக எண்: 13940 பக்கங்கள் 95-96
- நூலக எண்: 13940 பக்கங்கள் 54-55
- நூலக எண்: 13940 பக்கங்கள் 14-16