மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவ மாலையும்..!

0 comments


யாழ்ப்பாண வைபவ மாலை (1949)     யாழ்ப்பாண வைபவ மாலை (1953) யாழ்ப்பாண வைபவ மாலை (1995)
       



  யாழ்ப்பாண வைபவ மாலை (1949)  வையாபாடல் (1980)   யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (2004)
     
யாழ்ப்பாண வைபவ விமர்சனம் (1928)     யாழ்ப்பாண அரச பரம்பரை (2000)
     
ஈழமுந் தமிழும்(1957)       ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம் (1983) 
   

 யாழ்ப்பாண வைபவமாலை
மாதகல் மயில்வாகனப் புலவர் (மூலம்), வட்டுக்கோட்டை ப. சதாசிவம்பிள்ளை (பதிப்பாசிரியர்)

யாழ்ப்பாண சரித்திரத்தை விபரிக்கும் நூல்களுள் தெளிவும், ஆய்வுச்சிறப்பும், கொண்ட நூலாக சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தைக் கருதலாம். மாதகல் மயில்வாகனப்புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலை ஆராய்வதற்காக எழுதப்பட்ட நூலிதுவாகும். அதனாலேயே யாழ்ப்பாண வைபவ விமர்சனமென இந்நூலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. 

வையாபாடல்-
 வையாபுரி ஐயர் யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு, மாதகலைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் காலத்திலும் (கி.பி 1380-1414) பரராசசேகரன் காலத்திலும் சமஸ்தானப் புலவராக விளங்கியவர். இவர் வையாபாடல் (யாழ்ப்பாண வரலாற்று நூல்), பரராசசேகரன் உலா, பரராசசேகரன் இராசமுறை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இப்போது அச்சிடப்பட்ட வையாபாடலில் 105 செய்யுட்கள் காணப்படுகின்றன. மிகுதி செய்யுட்கள் அழிவடைந்து விட்டதாகக் கூறப்படுகின்றன.

 ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்- 
இது யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் ஸ்ரீமத் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களின் மாணாக்கர் யாழ்ப்பாணத்து மாதகல் ஸ்ரீ இ. நமசிவாயம்பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்று நூலாசிரியரின் மகனான இந்துசாதனம் ஆசிரியர் நம. சிவப்பரகாசம் அவர்களால் உரையெழுதப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. மூலநூல் 1923இல் வயாவிளான் ஜயசிறி சாரதா பீடேந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளிவந்திருந்தது. இலங்கையின் ஊர்ப்பெயர்களை குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஊர்ப்பெயர்களைத் தொடர்புபடுத்தியமைத்த கட்டளைக் கலித்துறைகளில் சைவ சமய உட்பொருளைப் பொதிந்து வைத்துள்ளார். இத்தகைய 27 செய்யுள்களை சிலேடைப் பொருளில் நாமாந்திரிதை வகையில்; அமைத்து அழகார்ந்த கவிதை நூலாக ஆக்கியுள்ளார். நாரந்தனையுடையான் பூநகரியினண்ணுடையான் றேருஞ்சுன்னாகமுடையானைச் சாவகச்சேரிதூரி வேர்வந்தளவெட்டி பச்சிலைப் பள்ளிவிளாங்குளம்போய்ச் சேரும்படிசெலக் காரைக்காலாள்கையிற் சிக்கினனே (8வது செய்யுள்) இதில் நாரந்தனை, பூநகரி, சுன்னாகம், சாவகச்சேரி, அளவெட்டி, பச்சிலைப்பள்ளி, விளாங்குளம், காரைக்கால் ஆகிய ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றபொதிலும், ஆழ நோக்கில் இக்கவிதையின் பொழிப்பு, கைலாசபதியாகிய சிவபெருமான் பக்திவலையில் அகப்படுவாரன்றி அகங்காரமுடையார் கண்களுக்குத் தோற்றமாட்டார் என்பதாகும். இச்செய்யுளின் பிரிப்பு பின்வருமாறமையும்: நாரந்தனை உடையான் - திருப்பாற் சமுத்திரத்தையுடைய மகாவிட்டுணுவும், பூநகரியில் நண்ணுடையான் -தாமரைப்பூவாகிய கோயிலையுடைய பிரமதேவரும், தேரும் சுன்னாகம் உடையானை-ஆராயப்படுகின்ற வெள்ளியங்கைலாசமலையைக் கோவிலாகவுடைய சிவபிரானை, சாவகச்சேரி துரீ- மரணத்தை அகத்தே கொண்டிருக்கின்ற ஊர்கள் எவ்விடத்தும் தேடி, வேர் வந்து அளவெட்டி- எல்லையெட்டியதன் நிமித்தம் வேர்வைகொண்டு களைத்து, பச்சிலைப்பள்ளி விள் ஆங் குளம்போய்ச் சேரும்படி செல்ல-மகாவிட்டுணுவும் பிரதம தேவரும் முறையே பசிய ஆலிலைச் சயனத்தையும் பூக்களலருகின்ற தாமரை வாவியையுமடைய, காரைக்காலாள் கையல் சிக்கினேன்-அடியார்க்கெளியனாகிய சிவபெருமான் முதிர்ந்த அன்பையுடைய காரைக்கால் அம்மையார் கையிற் சிக்கி அப்பெருமாட்டிக்குத் தரிசனங் கொடுத்தார் என்ற கருத்தினை இச்செய்யுள் வழங்குகின்றது., மூலம்: நூல்தேட்டம் 11588 

யாழ்ப்பாண அரச பரம்பரை- 
 யாழ்ப்பாண வரலாற்றில் தெளிவான காலகட்டத்து மன்னனாக விளங்கிய சிங்கைப் பரராசசேகரனின் மூன்று மனைவியருக்கும் பிறந்த பிள்ளைகளின் பரம்பரையினரின் வேர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். பரராசசேகரனின் நாடறிந்த மகன் பரநிருபசிங்கன்; அவனது மகன் பரராசசிங்கமுதலி; அவனது மக்களான எண்மருக்கு அவன் தனக்குச் சொந்தமான ஏழு ஊர்களையும், மகளுக்கு மாதகலையும் கொடுத்ததாக வரலாறு. கள்ளியங்காடு, அராலி, மல்லாகம், அச்சுவேலி, உடுப்பிட்டி, சண்டிருப்பாய், கச்சாய் ஆகிய ஏமூர்களில் பரநிருபசிங்கனின் பரம்பரையினர் இன்றும் வாழவேண்டுமென முடிவு செய்தேன். இந்த ஊர்களில் வாழும் வயோதிபர்களை விசாரிக்கத் தொடங்கினேன். இத்தருணத்தில் சிங்கப்பூரிலிருந்து எனக்கு ஒருநாள் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “எனது பெயர் நரசிங்கன்” என அந்த அழைப்பு விழித்தது: “நாங்கள் பரநிருபசிங்கன் வழிவந்த விசயதெய்வேந்திரமுதலி பரம்பரையினர். மலேசியா, சிங்கப்பூர், அராலி, தொல்புரம், மாதகல் முதலான பகுதிகளில் வாழ்ந்து வருகின்றோம்" “அவ்வாறாயின் உங்கள் மூதாதையர் அராலியைச் சேர்ந்தவர்களா ?” என்று வினவினேன். ஏனெனில், பரநிருபசிங்கனின் மகன் பரராசசிங்கமுதலியின் நான்காவது மகனான விசயதெய்வேந்திரமுதலிக்குக் கிடைத்த ஊர் அராலியாகும். "ஆமாம். எனது பேரனார் நன்னித்தம்பி அராலியைச் சேர்ந்தவரே” என்றார் நரசிங்கன்: “நாங்கள் இன்றும் எங்களது பெயர்களை எமது மூதாதையரின் பெயர்களாகவும் இணைந்த பெயர்களாகவும் கொண்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் என்னிடமுள்ள ஆவணங்களை அனுப்பி வைக்கின்றேன். அத்தோடு தொல்புரத்தில் வசிக்கும் எனது சகோதரி பூமாதேவியையும் அவரது கணவர் சட்டத்தரணி நடராஜாவையும் அராலியில் வாழும் எனது மூத்த தமக்கையார் தங்கத் தேவியையும், மாதகலில் வாழும் எனது தமையனார் அதிகார சிங்கனையும் தொடர்புகொண்டு விசாரியுங்கள். அவர்களும் தகவல்கள் தருவார்கள்.

மாதகல் மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவ மாலை 2005

https://www.mathagal.net/2018/02/MayilvakanapPulavar.html


https://www.mathagal.net/2020/12/Mayilvakanapulavar.html


https://www.mathagal.net/2018/03/MayilvakanapPulavar18.html

 நூலக நிறுவனம், நூலகம் இணையத்தில் இருந்து

Aucun commentaire:

Enregistrer un commentaire