...::சாவு அறிவித்தல்::...
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கடந்த 1950 தொடக்கம் முல்லைத்தீவு கோவில் குடியிருப்பு பின்னர் செல்வபுரம் என்னும் இடங்களில் வாழ்ந்தவருமான "பதுவை வைத்தியம்" என்று செல்லமாக அழைக்கப்படும் ஆயுர்வேத வைத்தியர் திரு. மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி திரேசம்மா அவர்கள் 16 பெப்ரவரி 2021ம் திகதியில் எல்லாம் வல்ல மூவொரு இறைபாதம் நாடிச் சென்றுள்ளார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் ஜேசுதாசன் (குணம்) கிளேயா (ஜெயா) றோக் மேரி (விஜயா) ஆகியோரின் அன்புத் தாயாரும், 10 பேரப் பிள்ளைகள் மற்றும் 05 பூட்டப் பிள்ளைகளின் பாட்டியும் ஆவார்.
இவரது ஆன்மா நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.
