2020 ஆம் ஆண்டு க.பொ.த. சா/தரம் பரீட்சையில் சித்தியடைந்த யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக, எமது பாடசாலையின் பழைய மாணவரும் பொறியியலாளருமாகிய திரு சுப்பிரமணியம் சுரேந்திரன் மற்றும் பழைய மாணவரும் ஜெர்மனியில் வசிப்பவருமாகிய திரு பூபாலசிங்கம் அன்பழகன் இருவரும் இணைந்து ஒரு தொகைப் பணத்தினை இம் மாணவச் செல்வங்களுக்கு அதிபர் மூலமாக வழங்கினார்கள்.
இவ் இருவருக்கு எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.








