பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 4ஆவது தடவையாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக நடாத்தும் "பசுமையில் மாதகல்" நிகழ்வின் மூலம் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை 16-11-2021 அன்று காலை 9 மணியளவில் யா/மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வுச்சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் சண்டிலிப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு பஞ்சாட்சரம் கணேசன் அவர்கள், சிறப்பு விருந்தினர் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவன் அவர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு வி.சிற்றம்பலம் அவர்கள், மாதகல் கிராமத்தின் நான்கு பாடசாலைகளின் அதிபர்கள், முன்பள்ளிகளின் சார்பாக மாதகல் புனித தோமையார் முன்பள்ளி இணைப்பாளர் அருட்சகோதரி றோஸ் மேரி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
கடந்த காலங்களில் கொரோணா நோய் தாக்கத்தினால் இறந்தோர் நினைவாகவும், தற்காலத்தில் கொரோணா தாக்கத்திற்குள்ளாகி அவலப்படுவோர் குணமடையவும் வேண்டி இறைவேண்டுதலுடன் அமைதியான இறை வணக்கம் இடம்பெற்றது.
வரவேற்புரையினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் உப செயலாளர் திருமதி ஜே. கோமதி அவர்கள் வழங்கினார். தலைமையுரையினை நிகழ்வின் தலைவர் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்கள் ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர், பிரதம விருந்தினர் உரைகளை தொடர்ந்து, பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால் யா/மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்திற்கு மைதானம் சீர்படுத்தல், ரோணர் கொள்வனவு மற்றும் காகிதாதிகளிற்கென இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதி 51,500ரூபா இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவரினால் குறித்த பாடசாலையின் உப அதிபர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திரு யோ.எ. பங்கிராஸ் அவர்களினால் பசுமையில் மாதகல் திட்டத்தின் 3 ஆண்டு நிலவர செயற்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டு, குறித்த அறிக்கையினை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
16-11-2021 அன்று 4 ஆவது தடவையாக நடைபெறும் பசுமையில் மாதகல் மூலம் மரக்கன்றுகள் வழங்கல் செயற்பாடுகள் விடயமாக பாடசாலைகள் மூலமாகவும், முன்பள்ளிகள் மூலமாகவும் 2022ஆம் ஆண்டில் பெற்றுக் கொள்ள வேண்டிய மாதிரி மதிப்பீட்டு அறிக்கை படிவங்களை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்திலிருந்து மாதகல் மண்ணிற்கு சமூகம் தந்து, இன்றைய நிகழ்வில் பங்கேற்ற இணைப்பாளர் திரு N. சரவணன், உப செயலாளர் E. ரகுலேந்திரன், நிர்வாக உறுப்பினர் P. தயாபரன் ஆகியோரால் சம்பந்தப்பட்ட 4 அரச பாடசாலைகளிற்கும், 5 முன்பள்ளிகளிற்கும், இதற்கு பொறுப்புடையோரிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வினை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவரினால் மரக்கன்றுகள் பிரதம விருந்தினர் சண்டிலிப்பாய் கோட்டக் கல்வி பணிப்பாளரிற்கும், மாணவர்கள், ஆசிரியர்களிற்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வை அடையாளப்படுத்தும் நோக்கில் யா/மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய வளாகத்தில் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது.
தொடர்ந்து இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக சபை உறுப்பினர் திருமதி ம. லக்சிக்காவினால் நன்றியுரை வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், முன்பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், 4 அரச பாடசாலைகளினதும், 5 முன்பள்ளிகளினதும் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியதும் குறிப்பிடத்தக்கதுடன், குறித்த நிகழ்வு தற்கால சுகாதார வழிமுறைகளை கவனத்தில் கொண்டு இடம் பெற்றதும் விசேட அம்சமாகும்.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம்
"பசுமையில் மாதகல் "
எதிர் காலச் சந்ததிக்காக பூமிப்பந்தின் சமநிலையினை பேண ஓர் சிறிய பங்களிப்பினை வழங்குவது எமது கடமை என நினைத்து இந்த நிகழ்வினை வருடாந்தம் செய்ய உள்ளோம்.