யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் , அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.
காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தண்டஹ் போது , காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.- tamilnews1
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் கடற்படையினருக்காக காணி அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு பிரசன்னமாகியுள்ள நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றினை அளவீடு செய்வதற்கு முயற்சிமேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.
குறித்த காணியினை வழங்குவதற்கு காணி உரிமையாளர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை நில அளவைத்திணைக்களத்தினர் கை வசம் வைத்திருப்பதாக தெரியவருகிறது.
இருந்தபோதிலும் காணி உரிமையாளர் அங்கு வந்தால் மட்டுமே காணி அளவீடு செய்ய அனுமதிக்கப்படும் என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
ஏற்கனவே குறித்த பகுதியில் கடற்படையினர் அங்கு பிரசன்னமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. - aruvi.com
யாழ் மாதகலில் பொதுமக்களின் காணி போதி மயானத்திற்து சொந்தமானகாணி குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரம் காணிகளை அடாத்தாக சுவீகரிக்க முயன்ற சிறிலங்கா கடற்படையின் முயற்சிக்கு எதிராக மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!!
எதிர்ப்பை அடுத்து சுவீகரிப்பு முயற்சியை தற்காலிகமாக கைவிட்டு கடற்படையினர் திரும்பினர்