மாதகல் நெற் இணையத்தின் அன்பான வாசகர்களே!
உங்கள் அபிமான எம் இணையத்தளம் உருவாகி பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்து தற்போது பன்னிரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்பதை உங்களுக்கு அன்போடு அறியத்தருகிறோம்.
நாம் அந்நிய தேசத்தில் ஆங்காங்கே பரந்து வசித்து வந்தாலும், எம் சிந்தையில் என்றென்றும் இருப்பது எம் மாதகல் மண்ணின் நினைவுகளும், உணர்வுகளும், உறவுகளும் தான்.
நாம் இவ் இணையத்தினை உருவாக்கியதின் நோக்கமே எம்மவர்களுக்கும், எம் மண்ணிற்குமான தொடர்பினை நாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதற்காகவே...
இது வரை காலமும், எம்மால் முடிந்த சேவையினை எம்மூருக்கும், உறவுகளுக்கும் வழங்கி வருகிறோம்.
எந்த ஒரு விடயமாயினும்,குறை நிறைகளை சார்ந்து இருக்கும். அதேபோன்று, எம் இணையத்தின் சேவையின் குறைகளை எமக்கு எடுத்துக்கூறி, மென்மேலும் திறம்பட , துரிதமாக எம் இணையம் செயற்பட உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை.
அதேவேளையில், எம் இணையம் தரப்பில் ஏதாவது தவறுகள் இருப்பின், நாம் உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கின்றோம்.
மற்றும், எமது ஊரில் இடம்பெறும் நிகழ்வுகளின் புகைப்படங்களையும், காணொளிகளையும், தகவல்களையும் உடனுக்குடன் எடுத்து தடைதாமதமின்றி தந்துதவுபவர்களுக்கும், மாதகல்கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகளாவியரீதியில் வசிக்கின்ற மாதகல் உறவுகள், நலன்புரிச்சங்கங்கள், இளையோர் அமைப்புகளும் ஏனைய நாடுகளில் வதியும் எமது இணையத்தினை தினமும் பார்வையிடுகின்ற எமது உறவுகள் அனைவருக்கும் உளங்கனிந்த நன்றிகளை இந்நாளில் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாதகல் மக்களே இது உங்களுக்கான , உங்கள் இணையத்தளம் என கருதி , எங்கள் சேவை உங்களுக்கு தேவை என எண்ணி , எம் பயணம் பல சகாப்தங்கள் தொடர்ந்திட நீங்கள் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருக்கும் வண்ணம் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
அன்பர்களே ! உங்களிடம் ஓர் சிறிய வேண்டுகோள்: அதாவது, எம் கிராமத்தில் நடக்கும் நிகழ்வு எதுவாயினும் எம் மின்னஞ்சல் முகவரியான : mathagal.net @gmail.com , அல்லது Viber, Whatsapp மூலமாகவோ தயவுசெய்து எமக்கு தெரியப்படுத்தவும்.
ஏனென்றால், தகவல் சேகரிப்பு என்பது தான் எம் இணையத்திற்கு பெரிதும் சவாலான ஒரு விடயமாக இருந்து வருகிறது.
ஊரின் நலன் கருதி, நீங்களும் எம்முடன் கைகோர்த்தால் தகவல்களை உடனுக்குடன் எம்மவர்களுக்கு அறிவிக்க மிகவும் இலகுவாக இருக்கும்.
மீண்டும், கோடானுகோடி நன்றிகள் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், ஊக்குவிப்புக்கும்....