நாளைய தீர்ப்பினை கூட மாற்றி அமைத்திட வந்துதித்த எம் மாதகல் செல்வன் இவர்...
மாற்றம் ஒன்றின் மூலமே இயற்கையின் சீற்றத்தை குறைத்திட முடியும் என விடாமுயற்சியுடன் பாடுபடும் ஓர் தவப்புதல்வன் இவர்..
எம் மாதகல் மண்ணை பூர்வீகமாகவும், பிரான்ஸ் நாட்டினை வதிவிடமாகவும் கொண்ட இவர் காலஞ்சென்ற திரு புவனேஸ்வரன் அவர்களும், திருமதி நகுலினி அவர்கள் ஈன்றெடுத்த தங்க மகன் ஆகிய விபுலன் புவனேஸ்வரன் ஆவார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் உபாதைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வீதிகளில் இறங்கி பல போராட்டங்களை தலைமை தாங்கினார்.
காலநிலை மாற்றம் , சில உயிரினங்களின் அழிவு பற்றி எல்லாம் எடுத்துரைக்க களம் இறங்கினார்.
நாளை நம் சந்ததியினர் வாழ்வதற்கு சுத்தமான காற்று, போதுமான நீர், கலப்படமற்ற உணவு, மாசூ இல்லாத பூமி இவை அனைத்துமே முக்கியம் என வலியுறுத்தி வருகின்றார். தற்போது, நம் தவறான செயற்பாட்டால் சில உயிரினங்களின் அழிவை தடுக்கும் முகமாக "Animal" எனப்படும் ஆவணம் ஒன்றில் நடித்துள்ளார்.
இவ் ஆவணம் எதிர்வரும் மார்கழி மாதம் முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நாமும் இந்த ஆவணத்தை பார்வையிட்டு இந்த சிறுவனுக்கு எமது ஆதரவை அளித்து , இவரது நோக்கம் நிறைவேறிட துணை நிற்போம்.
இவரது தந்தையின் ஆசீர்வாதத்துடன், இவர் எடுத்து வைக்கும் படி அனைத்துமே ஜெயத்தினை பெற்று தந்திட நாம் இறைவனை பிரார்த்திப்போம்.
இவரது புகழ் அகிலம் தொட்டு விட வேண்டும்.
வாழ்த்துக்கள் எம் மாதகல் மைந்தனே. நீர் உம் வாழ்வில் சிகரம் தொட வேண்டும்.