நன்றி நவிலல்....
மாதகல் வாசியான திரு.காசி ஜீவலிங்கம் அவர்களுக்கு "மாதகல் நெற் " இணையத்தளம் தமது மனமார்ந்த நன்றிகளை இக்கணம் தெரிவித்துக்கொள்கிறது.
"யாழ்பாவாணன்" எனும் புனைப்பெயர் கொண்ட நீங்கள் , உங்கள் அதீத சிந்தனையில் அழகான கவிகளை தந்தீர்களே...
எளிமையான வார்த்தைகள் மூலம்
ஆழமான கருத்துகளை வடிவமைத்தீர்களே...
இன்று, உங்கள் பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கி எம்மிணையத்தின் பணியினை கூட வர்ணித்து, வாழ்த்தினீர்களே...
நன்றி என்ற ஓர் வார்த்தை போதாது ஐயா, எம் இணையம் அளவு கடந்த உற்சாகத்துடன் செயற்பட நீங்கள் எமக்கு தரும் ஊக்குவிப்பிற்கு.
இவரைப்போல,எங்கள் பணி இனிதே தொடர்ந்திட தம் உள்ளத்தால் பிரார்த்திக்கும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
பதினோராம் ஆண்டில் மாதகல்.நெற்..!
0
comments
Inscription à :
Publier les commentaires (Atom)