மாதகல் அருள்மிகு காளிகா சமேத ஞான வீரபத்திரர் தேவஸ்தானம் மணவாளக் கோல விழாவும், பொங்கல் நிகழ்வுகளையும் காணொளி பதிவுகள் மூலம் பார்வை இடலாம்..!

0 comments














































 




 

தெய்வீக அருட்தலங்கள் பல விளங்கும் இலங்காபுரி திருநாட்டின் தலைநகரில் வடபால் யாழ்ப்பாணத்தில் சகல வளமும் நிறைந்த மாதகல் எனும் கிராமத்தில் தமிழும் சைவமும் தழைத்தோங்குகிறது. வேண்டுவார் வேண்டும் வரத்தை ஈபவனாய் விளங்கும் காளிகா சமேத ஞான வீரபத்திர பெருமானுக்கு சுபகிருது வருஷ வைகாசி மாதம் வெள்ளிக்கிழமை 27.05.2022 (தமிழுக்கு வைகாசி 13ம் திகதி) அச்சுவினி நட்சத்திரத்தில் மணவாளக் கோல விழாவும் வருடாவருடம் நடைபெறும் பொங்கல் விழாவும் நடைபெறுவதற்கு திருவருள் கைகூடியுள்ளது.


எம்பெருமானுக்கு கிரிகைகள் ஆரம்பமாகி சம்காபிஷேகம் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். பொங்கல் விழா மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.00 மணிக்கு நிறைவுறும்.


முக்கிய குறிப்பு : பொங்கல் விழா 2.00 மணிக்கு முன், பின் மாற்றம் ஏற்படலாம். அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகைதந்து எம்பெருமானுக்கு வேண்டிய பால், தயிர், இளநீர், பூக்கள் முதலிய அபிஷேகத் திரவியங்களை கொடுத்து எம் பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சுகாதார முறைப்படிமுக கவசம் அணிந்து சமூக இடைவெளி பேணி நடக்கவும்.


 

பிரதம குரு

வாமதேவ சிவாச்சாரியார் "கிரியா வித்தகர்"

சிவப்பிரம்மஸ்ரீ. கதிர் செ. மங்களேஸ்வரக்குருக்கள்

(மாதகல்)


இங்ஙனம்                  

சி.காசிராசா                

காளிகா சமேத ஞான வீரபத்திரர்

Aucun commentaire:

Enregistrer un commentaire